CF MOTO 450MT review in tamil 
லைஃப்ஸ்டைல்

CF MOTO 450MT - திரும்பி வந்துட்டேனு சொல்லு

அட்வெஞ்சர் பைக் செம்ம ஸ்டைலிஷ்-ஆவும், reasonable விலையிலும் வாங்கணும்னா இது நல்ல choice. 400cc செக்மெண்ட் புதுசா try பண்ணறவங்க இதை பாக்கலாம்!

Naveen

அறிமுகம்:

CF MOTO மீண்டும் இந்தியா வந்தாச்சு! 450MT - இப்போ TREND LA இருக்கும் அட்வெஞ்சர் பைக் SEGEMENT-ல வாராங்க, ரிவ்யூ பாக்கலாம்!

டிசைன் & லுக்குகள்:

பைக் பாக்க பெரியது, அட்வெஞ்சர் பைக் ரொம்ப ஸ்டைலிஷ். பெரிய ப்ரீமியம் பைக் மாதிரி ஃபீல் வரும். பாக்கும்போது ரொம்ப attention-grabbing! ரோட்ல எல்லாரும் திரும்பி பார்க்கும் மாதிரி ஒரு லுக்.

எஞ்சின்:

வல்லுநகர்கள் என்ன சொல்ராங்கன்னா 450cc parallel twin எஞ்சின், 40BHP பவர், 35NM டார்க். ரிவ்யூ பார்த்தா, எஞ்சின் ரொம்ப ஸ்மூத்-ஆ இருக்கும்னு சொல்லுறாங்க. ஆனால், கீழ் ரேஞ்சில் அப்படி ஒரு பவரும் ஃபீலும் தெரியாது. கொஞ்சம் RPM மேல தள்ளினா தான் POWER FEEL AGUM, ஹைவேயில் செம்ம ஸ்மூத்-ஆ கிரூஸ் பண்ணலாம். OFF ROAD- UM நல்லா தான் இருக்கு, ஆனா full-fledged அட்வெஞ்சர் பைக் போல எதிர்பார்க்காதீங்க.

ஹேண்ட்லிங்:

உக்காரும் போஸிஷன் ரொம்ப COMFORTABLE, especially long ridesக்கு. சீட்டும் செம்ம COMFORTABLE. ஹேண்டில் பிடிக்க ரொம்ப easy-ஆ இருக்கும், நீண்ட டிரைவ் செஞ்சாலும் தோள்ல வலி இல்ல.

சஸ்பென்ஷன்:

முன்புறம்: 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்

பின்புறம்: மோனோ-ஷாக், ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யலாம்.

பைக் balance-ஆ இருக்கிறது, ஆனா hardcore அட்வெஞ்சர் பைக் மாதிரி ஆவல் கொள்ளாதீங்க!

டெக் & ஃபீச்சர்ஸ்: Ride modes, TFT display, smart features எல்லாம் இருக்கு! ஹைவேயில் பயணிக்கும்போது bore அடிக்காத மாதிரி engage பண்ணும்.

பிரேக்கிங்:

முன்புறம்: 300mm ட்வின் டிஸ்க்

பின்புறம்: 240mm சிங்கிள் டிஸ்க்

ABS: பிரேக்கிங் நல்லதா இருக்கு, ABS நல்ல stability குடுக்கும். emergency நேரத்துல செம confident-ஆ நிக்கலாம்.

பிடித்தவை:

  • விலை ரொம்ப சரியானது

  • ப்ரிமியம் ஃபீல் தரும் ஃபீச்சர்ஸ்

  • ரொம்ப கம்ஃபர்டபுள் ரைடு

பிடிக்காதவை:

  • CF MOTO மேல நம்பிக்கை வர இன்னும் கொஞ்சம் டைம் ஆகும் பவர் சுமாராக இருக்கும், அதுவும் லோ RPM ல

தீர்ப்பு:

அட்வெஞ்சர் பைக் செம்ம ஸ்டைலிஷ்-ஆவும், reasonable விலையிலும் வாங்கணும்னா இது நல்ல choice. 400cc செக்மெண்ட் புதுசா try பண்ணறவங்க இதை பாக்கலாம்!

விலை:

₹4.5 - ₹5.5 லட்சம் (தகவல் மாற்றத்திற்குரியது)

SAFE AH - ஓட்டுங்க! அடுத்த ரிவ்யூவில் சந்திக்கலாம் நண்பர்களே!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்