Honda QC 1 review 
லைஃப்ஸ்டைல்

ஹோண்டா QC1 – குறைந்த விலையில் EV ஸ்கூட்டர்! நம்பலாமா?

Budget EV தேடுறவங்களுக்கு Honda QC1 ஒரு செம்ம choice!

Naveen

வணக்கம் ரைடர்ஸ்!

இந்தியாவில் EV ஸ்கூட்டர்கள் ரொம்பவே விலையுயர்ந்தது, ஆனா ஹோண்டா தன் QC1 ஸ்கூட்டரை அதிகமாய் செலவு செய்ய முடியாதவர்களுக்கு ஒரு சரியான தேர்வாக கொண்டு வந்திருக்காங்க! குறைந்த விலைன்னா, குவாலிட்டி குறைவா இருக்கும்? இந்த ரிவியூ-வில் பார்ப்போம்!

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

வடிவமைப்பு & தோற்றம் – சூப்பரா இருக்கா?

QC1-ஐ பாத்ததும் புதிய ஜெனரேஷன் Activa மாதிரி தோற்றம் இருக்கும்!

கூர்மையான & ஸ்லிம் டிசைன், புதிய டெயில் லைட்ஸ்

5 கலர் ஆப்ஷன்ஸ், கிளாசிக்கான Black வேரியண்ட் – BATMAN ஸ்டைல் Feel!

சிம்பிளா, motta boss look-ஆ இருக்கு!

எஞ்சின் & செயல்திறன் – இதுக்கு போதுமா?

1.5 kWh நிலையான (Fixed) பேட்டரி பேக்

பவர் அவுட்புட்: 1.8 kW

டார்க்: 77 Nm

மேக்ஸிம் வேகம்: 50 kmph

ரேஞ்ச்: 80 km

மேலும் படிக்க: KTM 390 Adventure 2025 மதிப்பீடு: ஒரு மதிப்புமிக்க மேம்படுத்தலா?

சிறிய பயணங்களுக்கு செம்ம, 50 kmph-க்கு எளிதாக அடையும்!

ஆனால், அதிக வேகம் & பவர்ஃபுல் ரைடு எதிர்பார்க்க முடியாது!

பட்ஜெட் EV ஸ்கூட்டர் – நிதானமான நகரப்பயணத்துக்கு மட்டுமே சரியானது!

"Performance-packed scooter" எதுவும் எதிர்பார்க்காதீங்க!

சார்ஜிங் – ஒரு பொறுமைவேண்டும்!

330W சார்ஜர் – முழுமையாக சார்ஜ் ஆக 6 மணி 50 நிமிடம் ஆகும்!

0%-லிருந்து 80% வரை சார்ஜ் ஆக 4 மணி 30 நிமிடம் ஆகும்!

இந்த segment-ல இருக்கும் மற்ற EV-களோட சராசரி சார்ஜிங் நேரத்துக்கு சமமானது!

சவாரி & கையாளுதல் – லேசா இருக்கா?

எடை: 89.5 kg – ரொம்ப லேசா இருக்கு!

மேலும் படிக்க:Hero xpulse 200 ஓட்டவும் செய்யலாம் பறக்கவும் செய்யலாம்

சக்கர அளவு:

முன்: 12-இஞ்ச் அலாய் வீல்

பின்: 10-இஞ்ச் அலாய் வீல்

பிரேக்கிங்:

முன்: 130mm ட்ரம்

பின்: 110mm ட்ரம்

நகர்ப்புற சாலைப்பயணங்களுக்கு சூப்பர் – நெரிசல், திருப்பம் எல்லாம் handling மிக எளிது!

அதிக சுமை (pillion) இருந்தா, சஸ்பென்ஷன் கொஞ்சம் கடினம் இருக்கும்!

Lightweight & Easy to handle – இளைஞர்களும், பெண்களும், மூத்த குடிமக்களும் மிக சுலபமாக ஓட்டலாம்!

வசதிகள் – இதில் என்ன கிடைக்கும்?

5-inch LCD இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்

கீலெஸ் ஸ்டார்ட் / ஸ்டாப் (Keyless Ignition!)

26-லிட்டர் அடிக்கீழ் சேமிப்பு (Under-seat Storage) – Helmet எளிதாக வைக்கும் இடம்!

USB Type-C சார்ஜிங் போர்ட் – மொபைல் சார்ஜ் tension இல்ல!

முன்புற சேமிப்பு பாக்ஸ் – சிறிய பொருட்களுக்கு use பண்ணலாம்!

"Side Stand Safety Feature" – Side Stand எடுத்தவுடன் மொட்டார் ஆன் ஆகும்!

இந்த விலைக்குள் இதைப் பார்ப்பதே கிடையாது!

விலை – எவ்வளவு?

சென்னை சாலை விலை (On-road Price): ₹1,06,060/-

எந்த EV-க்கும் ஒப்பீட்டால் மிக குறைந்த விலை!

நன்மைகள் & குறைபாடுகள் – இதை பார்க்காம எதுவும் வாங்கக்கூடாது!

மேலும் படிக்க: 2025 SUZUKI ACCESS 125 – நம்ம ஊருக்கேத்த ALL-ROUND ஸ்கூட்டர்!

நன்மைகள் (Pros):

குறைந்த விலை EV – அதிக செலவு செய்ய முடியாதவர்களுக்கு சரியான தேர்வு!

எடை குறைவாக இருப்பதால் handling super!

நல்ல சேமிப்பு வசதிகள் – 26L under-seat storage + front storage!

Keyless start & USB charging – நவீன வசதிகள்!

குறைபாடுகள் (Cons):

மேக்ஸிம் வேகம் 50 kmph – அதிக performance எதிர்பார்க்க முடியாது!

சார்ஜிங் நேரம் அதிகம் – 6 மணி 50 நிமிடம்!

டிஸ்க் பிரேக்குகள் இல்லை!

இறுதித் தீர்ப்பு – வாங்கலாமா? வேண்டாமா?

எல்லா EV-களும் ரொம்ப விலை உயர்ந்தது!

ஆனால், Budget EV தேடுறவங்களுக்கு Honda QC1 ஒரு செம்ம choice!

நல்ல mileage + பெரிய brand Honda + செலவு குறைக்க ஆர்வம் இருந்தா – இதை யோசிக்கலாம்!

அடுத்த Review -ல பாப்போம் ரைடர்ஸ் பாத்து வண்டி ஓட்டுங்க BYE

மறுப்பு (Disclaimer):

இந்த Honda QC1 பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமான குறிப்புகள் & பயனர் விமர்சனங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. உண்மையான செயல்திறன், விலை மற்றும் வசதிகள் இடம், டீலர்ஷிப், அரசாங்க கொள்கைகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறலாம். வாங்குவதற்கு முன், அருகிலுள்ள ஹோண்டா டீலரை சந்தித்து உறுதிப்படுத்தவும்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்