ஹோட்டல்களில் கிடைக்கிற மாதிரி, மேல நல்லா மொறுமொறுப்பாவும், உள்ளே ரொம்ப சாஃப்டாவும்இருக்குற மீன் வறுவலை வீட்ல செய்யணும்னா, மசாலா தடவறதுல இருந்து பொரிக்கிற வரைக்கும் சில சின்ன விஷயங்களைக் கவனிக்கணும்.
மீன் வறுவல் மொறுமொறுப்பா வரணும்னா, அதுல தடவுற மசாலா உதிராமல் மீனோட நல்லா ஒட்டி இருக்கணும். அதுக்குதான் மாஸ்டர்கள் ஒரு சிம்பிள் ட்ரிக் யூஸ் பண்றாங்க:
மசாலா கலவை: இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், தேவையான உப்பு, அப்புறம் கொஞ்சமா எலுமிச்சை சாறு இதையெல்லாம் ஒரு பாத்திரத்தில் போடுங்க.
சீக்ரெட் பொருள்: இதுல, ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு இல்லன்னா சோள மாவு (Corn Flour) சேர்த்துக்கோங்க. இந்த மாவு சேர்ப்பதுதான் மசாலா உதிராமல் இருக்கவும், மீன் வறுக்கும்போது மேல மொறுமொறுன்னு இருக்கவும் ஹெல்ப் பண்ணும்.
மசாலா தடவிய மீனை, குறைஞ்சது ரெண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வச்சிட்டு எடுத்தா, மசாலா நல்லா மீனுக்குள்ள இறங்கிடும்.
எண்ணெயின் சூடு முக்கியம்!
மீன் பொரிக்கிறதுல ரொம்ப முக்கியமான விஷயம், எண்ணெயோட சூடுதான்.
எண்ணெய் ரொம்ப சூடா இருந்தா மீனோட வெளிப்பக்கம் உடனே கருகிடும், ஆனா உள்ளே வேகாம ரப்பராட்டம் (Rubber-like) மாறிடும்.
எண்ணெய் சூடு கம்மியா இருந்தா மீன் அதிகமா எண்ணெயைக் குடிச்சுட்டு, வறுவல் பிசுபிசுன்னு இருக்கும்.
அதனால, மீனைப் பொரிக்கிறப்போ எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கணும். மீன் துண்டுகளைப் போட்டு, ரெண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமா ஆகுற வரைக்கும் வறுக்கணும். மீன் பொரிக்கும்போது, அதுல உள்ள நீர்ச்சத்து முழுசா வத்திப் போகாம பாத்துக்கிட்டா, உள்ளே கறி நல்லா சாஃப்டா இருக்கும்.
பொரிச்சு எடுத்த மீன் வறுவல்ல, கொஞ்சம் புதுசா பொரிச்ச கறிவேப்பிலையை தூவி சாப்பிட்டா, வாசனையும் சுவையும் இன்னும் கூடும். இந்த சின்ன சின்ன விஷயங்களை நீங்க ஃபாலோ பண்ணாலே, கடையில கிடைக்கிற அதே டேஸ்ட், வீட்லயும் கிடைக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.