குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் 65 என்றாலே ஒரு குதுகலம் தான். கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65-இல் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்படுவதால் அது ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் அதே சுவையில் சிக்கன் 65 செய்யலாம். முதலில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகளைச் சிறியதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.
இதன் மொறுமொறுப்பிற்காகச் சோள மாவு (Corn Flour) மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். மசாலாக்கள் சிக்கனில் நன்கு ஒட்டுவதற்கு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துப் பிசையலாம். கடைசியாகச் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது மிதமான சூட்டில் இருக்கும்போது சிக்கன் துண்டுகளைப் போட வேண்டும். அதிக சூட்டில் இருந்தால் வெளிப்புறம் கருகிவிடும், உட்புறம் வேகாது.
சிக்கன் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் சில பச்சை மிளகாய்களையும் கறிவேப்பிலையையும் எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்தால் மணம் இன்னும் கூடுதலாக இருக்கும். சிக்கன் 65-க்கு இயற்கையான சிவப்பு நிறம் வேண்டுமானால் காஷ்மீரி மிளகாய்த் தூளைப் பயன்படுத்தலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.