திடீர் மாரடைப்பு என்பது ஒரு பெரிய எச்சரிக்கை கொடுக்காமல், நம்முடைய உயிரை சட்டென்று எடுத்துவிடும் ஒரு ஆபத்தான பிரச்சினை. முன்னர் எல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வந்த இந்த நோய், இப்போது 20, 30 வயது இளைஞர்கள் மத்தியிலும் அதிகமாயிட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், நாம் சாப்பிடும் உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் ஓய்வு இல்லாத வாழ்க்கை முறைதான். இதிலிருந்து தப்பித்து, உங்கள் இதயத்தை ரொம்ப வலிமையாக வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கு. அதுதான், உங்களுடைய உணவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது.
இந்த ஒமேகா-3 என்பது ஒரு வகையான நல்ல கொழுப்பு. இது முக்கியமாக மீன் வகைகளில்தான் ரொம்ப அதிகமாகக் கிடைக்கிறது. குறிப்பா, சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று தடவை சாப்பிடுவது உங்கள் இதயத்துக்கு பெரிய பாதுகாப்பு கொடுக்கும். இந்த ஒமேகா-3 சத்து என்ன செய்யும் என்றால், உங்கள் இரத்தக் குழாய்களில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவி செய்து, அடைப்புகள் வராமல் தடுக்கும். நம் இரத்தம் ரொம்ப அடர்த்தியாக இருந்தால், அது கட்டியாகி மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கு. ஆனால், ஒமேகா-3 சத்து இரத்தத்தை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்து, இரத்த ஓட்டத்தை ரொம்ப தடையின்றி ஆக்குகிறது. இதனால், மாரடைப்பு வருவதற்கான ஆபத்து ரொம்பவே குறைகிறது.
நீங்கள் மீன் சாப்பிடாத சைவப் பிரியராக இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஒமேகா-3 சத்து, அக்ரூட் (வால்நட்), ஆளி விதை, மற்றும் சப்ஜா விதைகளிலும் நிறைய இருக்கு. தினமும் ஒரு கைப்பிடி அக்ரூட் சாப்பிடுவது அல்லது உங்களுடைய உணவில் ஆளி விதையைச் சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்துக்கு ரொம்ப நல்லது. அதோடு, ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதும் உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
உணவு மட்டும் இல்லாமல், உங்கள் மனதிற்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தினமும் ஒரு 7 முதல் 8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் அவசியம். தினமும் ஒரு 30 நிமிஷம் நடைப் பயிற்சி போறது, சின்னதா யோகா பண்றது, உங்கள் மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கும். மாரடைப்பு வர்றதுக்கு முன்னாடி உடல் சின்ன சின்ன முன்னெச்சரிக்கை கொடுக்கும். நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் வந்தால், அதை சாதாரணமா எடுத்துக்காமல் உடனே பரிசோதனை பண்ணிக்கணும். சரியான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தால், மாரடைப்பு பயம் இல்லாமல் ரொம்ப நாளைக்கு வாழலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.