ஒரு நல்ல காதலுக்கு, புரிதல், நேரம், அன்பு, ஈர்ப்பு இவையெல்லாம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு காமமும் அவசியம். அது பார்ட்னர்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள் சங்கமிக்கும் ஒரு இடம், கவனமாக கையாள வேண்டிய ஒரு இடமும் ஆகும்.
நீங்கள் உடலுறவை முறையாகக் கையாண்டால் நிறைய ஆரோக்கிய பலன்களை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா!? ஆம்… முறையான பாதுகாப்பான உடலுறவின் மூலம் நிறைய ஆரோக்கிய பலன்கள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தை பாதிக்காதா? என்ற கேள்வி எழுதுவது பொதுவான ஒன்றுதான்.
ஆனால் நீங்கள் தினமும் உடலுறவு கொள்ள இயலும். ஆனால் அதற்கு முறையான உணவுப்பழக்கமும் தூக்கமும் தேவை.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
நீங்கள் தினமுமோ அல்லது வாரத்தில் 2,3 முறை ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபடுபவராக இருந்தால், உங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எச்சில் சுரப்பிகள், மூக்கு மற்றும் யோனி போன்ற இடங்களில் உள்ள ம்யூகோசல் திசுக்களில் காணப்படும் இம்யூனோகுளோபுலின் A (IgA) உடலுறவால் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சளி, மற்றும் காய்ச்சலுக்கு எதிராக உடல் பலம் பெறுகிறது.
மன அழுத்தம் குறையும்
மனநிறைவான, நிம்மதியான சிரிப்புகளுடன் கூடிய உடல் உறவு, உங்களுக்கு 2 மணி நேர தியானத்திற்கு சமம். அதிகாலை உடலுறவுகளால் உங்கள் நாளே மகிழ்ச்சியானதாக மாறும். மேலும், மன அழுத்தம் மேலும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும். மேலும் பெண்களுக்கு சரும ஆரோக்கியம் பெருகுவதோடு உடல் எடையும் குறைய வாய்ப்புண்டு.
தூக்கத்தை அதிகரிக்கும்
நல்ல உடல் உறவின் மூலம் உங்களுக்கு தடையதார் சீரான உறக்கம் கிடைக்கும். நல்ல உறக்கமே போதும் உங்கள் உடல்நலத்தை 50% ஆரோக்கியமாக வைத்திட.
சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது
ஒரு நபர் உடல் உறவில் உச்ச இன்பத்தை பெரும் வேளையில் டைஹைட்ரோபியாண்ட் ரோஸ்டிரோன் என்ற ஹார்மோனை உடல் வெளியிடும்.. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் சரும திசுக்கள் சரியாகும். வாரத்திற்கு இரண்டு முறையாவது உச்ச இன்பத்தை அடையும் ஆண்கள் நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.