AEA savings scheme Admin
லைஃப்ஸ்டைல்

முதலீட்டோடு இணைந்த ஆயுள் காப்பீட்டு திட்டம் - எக்கச்சக்க லாபம் தரும் AEA திட்டம் பற்றி தெரியுமா?

இந்த திட்டத்தில் இணைவதால் என்ன பயன்? யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணைய முடியும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

Anbarasan

பொதுவாக ஒரு சேமிப்பு திட்டம் என்று வருகின்றபோது, ஒன்று அதில் ஆயுள் காப்பீடு இருக்கும். அல்லது நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டியிருக்கும். ஆனால் அஞ்சலகத்தில் செயல்படும் ஒரு திட்டமானது, உங்களுக்கு முதலீட்டால் கிடைக்கும் நன்மைகளோடு இணைந்து ஒரு ஆயுள் காப்பீடும் வழங்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

மத்திய அரசின் கீழ் செயல்படும் அஞ்சலகத்துறையில் மொத்தம் 6 வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் உள்ளது. அதில் உள்ள ஒன்று தான் இந்த சுமங்கள் (Sumangal) திட்டம். இந்த திட்டத்தை Anticipated Endowment Assurance அல்லது AEA திட்டம் என்றும் அழைக்கின்றனர். சரி இந்த திட்டத்தில் இணைவதால் என்ன பயன்? யாரெல்லாம் இந்த திட்டத்தில் இணைய முடியும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க: குறைந்த ப்ரீமியம்.. இரட்டிப்பு லாபம் - அஞ்சலக PLI திட்டம் பற்றி தெரியுமா?

சுமங்கள் திட்டம் என்றால் என்ன?

முன்பு கூறியதை போல, இந்த திட்டம் என்பது முதலீட்டோடு இணைந்த ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம். குறுகிய கால இடைவெளியில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு வட்டி கிடைப்பதோடு, ஒரு ஆயுள் காப்பீடாகவும் இது செயல்படும். பாலிசி செயல்படும் காலத்திற்குள் முதலீட்டாளர் மரணித்தால், முழு காப்பீட்டுத் தொகையும், இறப்பு நாள் வரை திரட்டப்பட்ட போனஸும் நாமினிக்கு வழங்கப்படும்.

சுமங்கள் திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்?

19 வயது முதல் 45 வயதுடைய இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் சென்றும் இந்த திட்டத்தில் இணைய முடியும்.

இந்த சுமங்கள் திட்டம் எப்படி செயல்படுகிறது?

இந்த திட்டத்தை பொறுத்தவரை 15 ஆண்டு மற்றும் 20 ஆண்டு என்று இரு முதிர்வு காலம் கொண்ட திட்டங்கள் செயல்படுகிறது. நீங்கள் 15 ஆண்டு கால திட்டத்தை தேர்ந்தெடுத்தல் நீங்கள் 19 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதுவே 20 ஆண்டுகால திட்டத்தை தேர்வு செய்தால் 19 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: இரண்டே வருட சேமிப்பு.. சிறப்பான லாபம் தரும் MSSC திட்டம் - யாரெல்லாம் இணையலாம்?

இந்த திட்டத்தில் 20,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். ஆகவே நீங்கள் திட்டத்தை துவங்கும்போதே காப்பீட்டுத் தொகையை முடிவு செய்து, அதற்கான பாலிசியயை தபால் அலுவலகத்தில் பெற வேண்டும்.

எப்படி சேமிப்பது?

மேற்கூறியதை போல, நீங்கள் தேர்வு செய்யும் தொகைக்கு (20,000 முதல் 5 லட்சம் வரை) ஏற்றார் போல உங்கள் பாலிசி வடிவமைக்கப்பட்டு, மாதந்தோறும் அதற்கான ப்ரீமியம் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். இந்த பாலிசி காலத்தில், போனஸ் விகிதத்தின்படி ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

நீங்கள் 15 ஆண்டுகால திட்டத்தை தேர்வு செய்தால் 6, 9, 12, மற்றும் 15வது ஆண்டின் முடிவில் நீங்கள் பாலிசி எடுத்த தொகைக்கு ஏற்ப சலுகைகளைப் (போனஸ்) பெறுவீர்கள்.

நீங்கள் 20 ஆண்டுகால திட்டத்தை தேர்வு செய்தால் 8, 12, 16, மற்றும் 20வது ஆண்டின் முடிவில் நீங்கள் பாலிசி எடுத்த தொகைக்கு ஏற்ப சலுகைகளைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க: சேமித்த பணத்திற்கு 3 மடங்கு லாபம் - இந்த அஞ்சலக திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம் தெரியுமா?

தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 48 ரூபாய் போனஸ் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது நிலையானது அல்ல, அரசு அறிவிப்பின்படி, இது மாற்றத்திற்கு உள்ளானது என்பதை மறக்கவேண்டாம்.

குறிப்பு : இந்த திட்டத்தில் இணையும் முன், உடல் ரீதியாக இந்த திட்டத்திற்கு நீங்கள் தகுதி உள்ளவரா என்ற சோதனை நடைபெறும்.

மேலும் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம், நீங்கள் சேமிக்க துவங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, லோன் பெறுகின்ற வசதி உள்ளது. அதே போல திட்டம் துவங்கிய 3 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் இந்த திட்டத்தில் இருந்து விளகவும் வழிகள் உள்ளது. ஆனால் அப்போது உங்களுக்கு போனஸ் தொகை கிடைக்காது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்