rd post office savings Admin
லைஃப்ஸ்டைல்

பத்து வருட சேமிப்பு.. வட்டியாக மட்டும் 1.5 லட்சம் அள்ளித் தரும் அஞ்சலக திட்டம்!

10 ஆண்டுகளின் முடிவில் 5,00,000 லட்சம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கும்...

Anbarasan

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து தொடர்ச்சியாக பார்த்துவருகிறோம். அந்த வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தை பற்றி இப்போது காணலாம். வருமானம் குறைவாக உள்ளவர்களும் தங்களுக்கான சேமிப்பை நிச்சயம் உறுதி செய்யவேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.

இந்தியாவை பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் சேமிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. என்ன தான் ஷேர் மார்க்கெட் மற்றும் SIP என்று பல டிஜிட்டல் சேமிப்புகள் நடப்பில் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் விரும்புவது அஞ்சலகத்தை தான். காரணம், அது அரசால் நடத்தப்படுவது. இதில் சேமிக்கும் பணத்திற்கான வட்டி என்பது நிலையானது. சேமிக்கும் பணத்தை பற்றிய கவலையும் மக்களுக்கு இருக்காது.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே அஞ்சலகத்தகால் செயல்படுத்தப்படும் திட்டம் தான் RD திட்டம். இதுவும் FDயை போல கூட்டு வட்டி தரும் ஒரு சேமிப்பு திட்டமாகும். இந்த 2025ம் ஆண்டு அளிக்கப்பட்ட தகவலின்படி, RD திட்டத்தில் பணத்தை சேமிப்பவர்களுக்கு 6.75 என்ற நிலையான வட்டி விகிதம் கிடைத்து வருகின்றது.

RDவில் இணைவது எப்படி?

RD திட்டம் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் இணைந்திருக்க மாட்டோம். RD என்பது இந்திய அஞ்சல் துறை நடத்தும் ஒரு சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் ஒரு பெரிய தொகையை 5 முதல் 10 ஆண்டுகள் லாக் செய்து லாபம் பெறலாம். அதே நேரம் மாதம் 100 ரூபாயில் RD கணக்கை துவங்கியும் உங்களால் சேமிக்க முடியும். இந்த RD திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணத்தை சேமிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு 6.75 சதவிகித வட்டி கிடைக்கும்.

திட்டம் எப்படி செயல்படுகிறது?

மாதம் உங்களால் 3000 ரூபாயை RD திட்டத்தில் சேமிக்க முடியும் என்றால், 5 ஆண்டுகளில் 1,80,000 ரூபாயை சேர்த்திருப்பீர்கள். இந்த கட்டத்தில் உங்கள் RD திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து, 10 ஆண்டுகள் வரை நீங்கள் 3000 ரூபாயை சேர்த்து வரவேண்டும். அப்போது 10 ஆண்டுகளின் முடிவில், நீங்கள் அசலாக மட்டும் சுமார் 3,60,000 ரூபாயை சேர்த்திருப்பீர்கள். இதற்கு RD முறையாக வட்டியாக மட்டும் 1,50,000 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் உங்கள் அசலோடு சேர்த்து, உங்களுக்கு 10 ஆண்டுகளின் முடிவில் 5,00,000 லட்சம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கும்.

யாரெல்லாம் இணையலாம்?

10 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய பெயரிலேயே RD கணக்கை துவங்க முடியும். 100 ரூபாய் கொண்டு கணக்கை துவங்கி, மாதம் 10 ரூபாய் என்ற குறைந்த அளவில் கூட உங்களால் இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகள் தான் என்றாலும். உங்களால் கூடுதலாக 5 ஆண்டுகள் சேமிக்க முடியும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று வருடத்திற்கு 4 முறை, சேமிக்கும் பணத்திற்கான வட்டி உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் இந்த RD திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பதும் எதிர்காலத்தில் சற்று உயரவும் வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலக துறை, இந்த RD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அதிகாரபூர்வகமாக வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்