post office savings details Admin
லைஃப்ஸ்டைல்

ஒரே ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கு.. எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

நீங்கள் 500 ரூபாய் செலுத்தி ஒரு அஞ்சலக கணக்கை துவங்கலாம்.

Anbarasan

ஒரு 20 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தோமானால், இந்திய பிரஜைகளாகிய நாம், வங்கிகளில் கணக்கை துவங்குவதற்கு முன்பாகவே அஞ்சலகத்தில் கட்டாயம் ஒரு சேமிப்பு கணக்கை திறந்திருப்போம். ஆனால் இன்றைய காலத்தில், இளைஞர்கள் மத்தியில் அந்த பழக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. அஞ்சலகம் மற்றும் அதை சார்ந்த சேமிப்பு திட்டங்களில் இக்கால இளைஞர்கள் நாட்டம் காட்டுவதில்லை. ஆனால் வங்கிகளில் ஒரு கணக்கை துவங்குவது எவ்வளவு சிறந்ததோ, அதே அளவிற்கு ஒரு அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கை துவங்குவதும் அவ்வளவு சிறந்தது.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

அஞ்சலக சேமிப்பு கணக்கு

500 ரூபாய் இருந்தால் போதும், உங்களால் ஒரு சேமிப்பு கணக்கை அஞ்சலகத்தில் துவங்கிவிட முடியும். இன்றைய தேதியில் பல வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் முறையை 1000 ரூபாய்க்கும் அதிகமாக மாற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் நீங்கள் சேர்க்கும் பணத்திற்கு உங்களுக்கு சுமார் 4 முதல் 4.2 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.

அஞ்சலக சேமிப்பு கணக்கின் நன்மைகள்

வங்கி கணக்குகளை போல அல்லாமல், அஞ்சலக சேமிப்பு கணக்கில் உங்களால் குறைந்தபட்சம் 10 ரூபாயை கூட சேமிக்க வழியுண்டு. அதே போல, 50 ரூபாய் துவங்கி பெரிய தொகை எதுவாக இருந்தாலும் உங்களால் கணக்கில் இருந்து எடுக்க முடியும்.

மேலும் படிக்க: அஞ்சலக "சுவிதா" திட்டம்.. உங்கள் சேமிப்புக்கு 5 மடங்கு லாபம் - யாரெல்லாம் இணையலாம்?

ஆண்டுக்கு 50 ரூபாய் மட்டுமே உங்களின் கணக்கில் இருந்து பராமரிப்பு கட்டணமாக பிடித்தம் செய்யப்படும். ஒரு அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்குவதால் பாஸ் புக், ATM கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை, ஆதார் சீடிங் ஆகிய வசதிகளை பெறமுடியும்.

அதுமட்டுமல்ல, ஒரு அஞ்சலக கணக்கை நீங்கள் திறப்பதால் அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆகிய திட்டங்களில் இணைய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் மறக்கவேண்டாம். மேற்கூறிய இந்த வசதிகளை சில படிவங்களை பூர்த்தி செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்குவது எப்படி?

10 வயதை கடந்த இந்திய நாட்டவர் அனைவரும் அஞ்சலக கணக்கை துவங்க முடியும். இருவர் இணைந்து கூட்டுக்கணக்காகவும் சேமிப்பு கணக்கை துவங்கலாம். 10 வயதிற்கு குறைவாக உள்ள நபர்கள், பாதுகாவலர் மூலம் கணக்குளை துவங்க முடியும். அதே போல தனி நபர் பயன்படுத்தும் கணக்கை கூட்டுக்கணக்காக மாற்ற இயலாது. அதேபோலத்தான் கூட்டுக்கணக்கை, தனி நபர் கணக்காக மாற்ற முடியுது.

மேலும் படிக்க: இரண்டே வருட சேமிப்பு.. சிறப்பான லாபம் தரும் MSSC திட்டம் - யாரெல்லாம் இணையலாம்?

நீங்கள் 500 ரூபாய் செலுத்தி ஒரு அஞ்சலக கணக்கை துவங்கலாம். அதே நேரம் உங்களின் கணக்கில் 500 ரூபாய் மட்டுமே உள்ளது என்றால், அதிலிருந்து உங்களால் பணத்தை எடுக்க முடியாது. மேலும் சேமிப்பு கணக்கை துவங்கும்போதே உங்கள் கணக்கிற்கு நாமினி நியமிக்க வேண்டும்.

வட்டி கணக்கீடு

மாதத்தின் 10ம் தேதி துவங்கி, அந்த மாதத்தின் இறுதி நாள் வரையிலான குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அடிப்படையில் தான் வட்டி கணக்கிடப்படும். நிலையான வட்டி விகிதம் 4 தான் என்றாலும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், இந்திய நிதி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படும். நீங்கள் உங்கள் அஞ்சலக கணக்கை மூட விரும்பினால், கணக்கு மூடப்பட்ட மாதத்திற்கு முந்தைய மாதம் வரை வட்டி வழங்கப்படும்.

தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஒரு சேமிப்பு கணக்கு செயல்படாமல் இருந்தால், அது "சைலன்ட் கணக்காக" மாற்றப்படும். அதில் உள்ள பணத்தை KYC படிவங்களை பூர்த்தி செய்த பிறகே எடுக்க முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்