post office savings scheme Admin
லைஃப்ஸ்டைல்

ஐந்து ஆண்டுகள் சேமித்தால் போதும்.. 8.2% வட்டி தரும் அஞ்சலக திட்டம் - யாரெல்லாம் இணையலாம்?

நீங்கள் உங்கள் 60வது அல்லது 55வது வயதில் ஓய்வு பெறுகின்றீகள் என்றால், அப்போது உங்களுக்கு கிடைக்கும் தொகை..

Anbarasan

அஞ்சலக சேமிப்பு திட்டங்களை பொறுத்தவரை 4 முதல் 8.5 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதங்களுடன் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, பலரும் இந்த சேமிப்பில் இணைந்து பலன் பெறலாம்.

அஞ்சலக சேமிப்பின் நன்மைகள்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வருவது தான் அஞ்சலக துறை. குழந்தை பிறந்த காலத்தில் இருந்து அவர்கள் வளர்ந்து 60 வயதை எட்டும் வரை, அவர்களுக்காக பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அஞ்சலக துறையை பொறுத்தவரை அதிகபட்ச வட்டி விகிதமே 8.5 வரை தான் உள்ளது என்றாலும் கூட, அதில் நாம் சேர்க்கும் பணத்திற்கான ரிஸ்க் என்பது மிக மிக குறைவு.

ஷேர் மார்க்கெட் மற்றும் இதர சேமிப்பு திட்டங்கள் போல இல்லாமல், சாமானியர்களுக்கு புரியும் வகையில் தான் இந்த சேமிப்பு திட்டங்களின் பரிவர்த்தனைகள் இருக்கும். இணைய வழியில் அணுக முடியாத நிலையில் உள்ள நபர்கள் கூட, அருகில் உள்ள அஞ்சலகத்தில் இணைந்து பலன் அடையலாம்.

மாதந்தோறும் கிடைக்கும் பணத்தை, அஞ்சலகம் சென்று படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து சேமித்தல் போதும். இன்றைய தேதியில், வட்டி கொஞ்சம் குறைவாக கிடைத்தாலும் (ஷேர் மார்கெட்டுடன் ஒப்பிடும்போது) நம்பகமான, மற்றும் எளிய சேமிப்பு முறையாக திகழ்ந்து வருகின்றது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.

முதியவர்களுக்கான பென்ஷன் திட்டம்

இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல சேமிப்பு திட்டங்கள் அஞ்சலகத்தில் உள்ளது. அதே போல, 55 அல்லது 60 வயதை கடந்த நபர்களுக்கும் பெரிய அளவில் சேமிப்பு திட்டங்கள் அஞ்சலத்தில் உள்ளது. அதில் ஒன்று தான் SCSS என்று அழைக்கப்படும் Senior Citizen Savings Scheme (மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்). 60 வயதை கடந்த இந்திய நாட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் சேரலாம். இன்றைய தேதியில் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் 8.4 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கிறது.

யாரெல்லாம் இணையலாம்?

60 வயதை கடந்த இந்திய நாட்டவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர்களால் பணத்தை சேமிக்க முடியும். மேலும் 3 வருட "விருப்ப நீட்டிப்பும்" இந்த திட்டத்தில் உள்ளது. அதாவது 5 ஆண்டுகளை கடந்து, 3 ஆண்டுகள் கூடுதலாகவும் பணத்தை சேமிக்க முடியும். மேலும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் கூட இந்த திட்டத்தில் தங்களது 55வது வயதை கடந்த பிறகு இணையமுடியும். ஆனால் அதற்காக சில பிரத்தியேக படிவங்களை பூர்த்தி செய்யவேண்டியிருக்கும்.

எப்படி இணைவது?

60 அல்லது 55 வயதை கடந்த அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம். அருகில் உள்ள அஞ்சலகம் சென்று, SCSS திட்டத்திற்கான படிவங்களை பெற்று, அதை பூர்த்தி செய்து நீங்கள் இணையலாம். மேலும் இந்த திட்டத்தில் "ஜாயிண்ட் அக்கவுண்ட்" முறையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 60 வயதில் நீங்கள் சேமிக்க துவங்கினால், 65 வயதின் முடிவில் 8.4 சதவிகித வட்டியுடன் உங்களுக்கு இந்த பணம் திரும்ப கிடைக்கும்.

திட்டத்தின் பயன்கள் என்ன?

இந்த திட்டத்தில் இணைபவர்கள் மாதம் 1000 ரூபாய் முதல் சேமிக்க துவங்கலாம். அல்லது ஒரே முறை 15 லட்சம் வரை சேமித்து அதற்கான வட்டியுடன் 5 ஆண்டுகளில் பணத்தை திரும்ப பெறலாம்.

நீங்கள் உங்கள் 60வது அல்லது 55வது வயதில் ஓய்வு பெறுகின்றீகள் என்றால், அப்போது உங்களுக்கு கிடைக்கும் தொகையை இதில் நீங்கள் இன்வெஸ்ட் செய்யலாம். ஒரு வேலை நீங்கள் 10 லட்சம் ரூபாயை இதில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 ஆண்டுகளின் முடிவில் 4,10,000 ரூபாய் மட்டும் வட்டியாக கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்றார் போல உங்களுக்கு 5 ஆண்டுகளின் இறுதியில் 8.4 சதவிகித வட்டியுடன் பணம் கிடைக்கும்.

மாதம் நீங்கள் 1000 ரூபாய் சேமித்தால் கூட, 5 ஆண்டுகளின் முடிவில் 60,000 ரூபாயை சேர்த்திருப்பீர்கள். அதற்கு வட்டியாக மட்டும் உங்களுக்கு 24,600 ரூபாய் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திட்டத்தில் இணைவதால், உங்களுக்கு வரி சலுகைகளும் கிடைக்கும். இன்றைய தேதியில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தரும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்