savings  
வணிகம்

நூறு வயது வரை உட்கார்ந்து சாப்பிடலாம் -இப்போதே சேமிக்க உதவும் ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்!

முன்பே கூறியதை போல இந்த ஆண்டு தான் இந்த பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Anbarasan

ஓய்வு காலத்திற்கு பிறகு கிடைக்கும் வருமானம் என்பது நம் அனைவருக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தால், நிச்சயம் அவர்கள் தங்களது 30வது வயதில் இருந்தே ஓய்வு காலத்திற்கான சேமிப்பை துவங்க வேண்டும். அந்த வகையில் இன்று LIC அறிமுகம் செய்துள்ள ஒரு புதிய பென்ஷன் திட்டம் குறித்து தான் இந்த பதிவில் காணவுள்ளோம். இந்த ஆண்டு தான் இந்த பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இப்போது இதில் இணைந்து பலனடையலாம்.

LIC ஸ்மார்ட் பென்ஷன்

முன்பே கூறியதை போல இந்த ஆண்டு தான் இந்த பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே LICயில் பல பென்ஷன் திட்டங்கள் இருந்தாலும், முதிர்வு காலம் இல்லாத ஒரு பென்ஷன் திட்டமாக இது அமல் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் சேமிக்க நினைக்கும் பணத்திற்கு ஏற்ப உங்களுக்கு 30 வயது முதல் 100 வயது வரை மாதந்தோறும் பென்ஷன் கிடைக்கும்.

வயது வரம்பு

நீங்கள் இந்த ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தில் உங்களின் 18 வயது முதல் இணையலாம். மேலும் அதிகபட்சமாக நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்றார் போல, 65 முதல் 100 வயது வரை உள்ள யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைய முடியும். குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாயிலிருந்த்து உச்சவரம்பின்றி இந்த பென்ஷன் திட்டத்தில் நீங்கள் பணத்தை சேமிக்கலாம்.

ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ஒரே ஒரு முறை மொத்தமாக நீங்கள் பணத்தை சேமித்தால் போதும். உடனடியாக இந்த திட்டம் முதிர்வடைந்து மாதந்தோறும் உங்களுக்கு பென்ஷன் பணம் கிடைக்கும். நீங்கள் பாலிசி தொடங்கும்போதே அதற்கான ஆண்டுத்தொகை விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டு, அது வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும்.

மேலும் படிக்க: 4 முனை போட்டியாக மாறிய களம்...அதிரடி காட்டும் அதிமுக...எப்படி சமாளிக்கும் திமுக?

தனி நபராகவோ அல்லது இருவர் இணைந்து கூட்டுக்கணக்காகவோ இந்த திட்டத்தில் இணைய முடியும். மாதாந்திரம், 3 மாதங்களுக்கு ஒருமுறை, 6 மாதத்திற்கு ஒருமுறை, வருடத்திற்கு ஒரு முறை என்று உங்களால் பென்ஷன் தொகையை பெறமுடியும். ஏற்கனவே நீங்கள் LICயில் வேறு ஏதேனும் பாலிசி எடுத்திருந்தால், நிச்சயம் உங்களுக்கு சலுகைகளும் வழங்கப்படும். பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகும் பென்ஷன் தொகை கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

நீங்கள் உங்களின் 35வது வயதில் இந்த திட்டத்தில் 2 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் உங்களுக்கு 1000 ரூபாய் பென்ஷன் பணம் கிடைக்கும். மேலும் நீங்கள் 18 வயதில் இந்த திட்டத்தில் இணைந்தாலும், உங்களுடைய 30வது வயதில் இருந்து தான் இந்த பென்ஷன் தொகை உங்களுக்கு வரத்துவங்கும்.

ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏஜெண்டுகள் மூலமாகவோ இந்த ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தில் உங்களால் இணைய முடியும். நிலையான வட்டி விகிதத்தை எதிர்பார்ப்பவர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். அதே நேரம் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப வட்டி விகிதங்களில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்புடையதாக இருக்காது. காரணம் நீங்கள் திட்டம் துவங்கும் நேரத்தில் நிர்ணயிக்கப்படும் வட்டி தான், உங்களுக்கு இறுதி வரை வழங்கப்படும்.

இணையத்தில் LIC SMART PENSION PLAN NO 879 என்று தேடினால், இந்த திட்டம் குறித்த அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்