இன்று [மார்ச் 27] நெல்லையில் எழுபத்து ஐந்து லச்சம் ஏமாற்றிய மூவர் கைது, மீண்டும் தலைதூக்கிய crypto currency வழக்குகள், அதிக வருவாய் ஈட்டும் கனவில், தவறான செயலிகளில் crypto currency- யில் பணம் போட்டு தொடர்ந்து ஏமாறும் மக்கள் .
முதலில் கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
கிரிப்டோகரன்சி என்பது ஒரு டிஜிட்டல் அல்லது மெய்நிகர் நாணயம் ஆகும், இது பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்ய குறியாக்கவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது .
மேலும் படிக்க:8 லட்சத்துக்கு கார் வாங்குறவங்க USE பண்ணிக்கோங்க!
இது எந்த மத்திய வங்கி அல்லது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாத ஒரு பரவலாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
கிரிப்டோகரன்சி பிளாக்செயின் என்னும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பிளாக்செயின் என்பது ஒரு பொது பதிவேடு.
இதில் அனைத்து பரிவர்த்தனைகளும் ,பதிவு செய்யப்பட்டு, பல கணினிகளால் சரிபார்க்கப்படுகின்றன. இது பணத்தை அனுப்பவும் பெறவும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான வழியை வழங்குகிறது.
தொழிநுட்பம் வளர வளர குற்றங்களும், அதிகரிப்பது போல கிரிப்டோகரன்சி நடைமுறைக்கு வர, அதனை சார்ந்த குற்றங்களும் பெருகிக் கொண்டே செல்கிறது.
மேலும் படிக்க:மாதம் 3000 சேமிப்பு.. 25 வயதில் முதலீட்டை துவங்கினால், 2 கோடி உறுதி!
உதாரணமாக, 2019ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில், ஒரு தம்பதியினர், மற்றும் அவர்களது மூன்று உதவியாளர்கள் மீது, கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக, புகார் பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை சேகரித்து, தடை செய்யப்பட்ட கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதே போல, 2020 முதல் 2024 வரை தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட, முந்நூறு வழக்குகள் ,பதிவாகி உள்ளதாக" விர்ச்சுவல் கையேடு" குறிப்பிடுகிறது .
கடந்த பிப்ரவரி மாதம் ,கோவையில் சுமார் ஐம்பது கோடி ரூபாயை கிரிப்டோகரன்சி செயலியில் போடுவதாக கூறி ஏமாற்றிய, ஐந்து பேரையும், தமிழக காவல் துறை கைது செய்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி , என்னவென்றால் இவர்களின் பொய்யான. கிரிப்டோகரன்சி செயலுக்கு " பிரபல நடிகைகளான ,காஜல் அகர்வால் மற்றும் தமன்னா " விளம்பரம் செய்தனர் என்பது பேசுபொருளாகவே இருந்தது .
மேலும் படிக்க:SBI vs HDFC vs ICICI: 5 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக லாபம் தரும்? ஆச்சரியமூட்டும் உண்மைகள் இதோ!
இதையடுத்து அரசாங்கமும் தனியார் , நிறுவனங்களும் இந்த கிரிப்டோகரன்சி செயலிகளை பற்றி ,பல விழிப்புணர்வு, விளம்பரங்கள் , செய்துகொண்டிருக்கின்றன ஆனால் இதையெல்லாம் பெருதும், பொருட்படுத்தாமல் மக்கள் ஏமார்ந்து கொண்டே இருக்கிறார்கள் , என்பதற்கான நிகழ்ச்சியாக தான், இன்று நெல்லையில் பதிவாகி உள்ள வழக்கு , கருதப்படுகிறது .
இன்று நெல்லையில் எழுபத்து ஐந்து லச்சம் ரூபாயை ,மீண்டும் ஒரு கும்பல் ,இதுபோல செயலியில் போடுவதாக கூறி ஏமாற்றி உள்ளனர் ." இசக்கி முத்து ,முகமது ரியஸ் ,ஐயாதுரை " ஆகிய மூவரும் மக்களிடையே இந்த செயலியில், உங்கள் பணம் போட்டால் நான்கு மடங்காக பெருகும் , என நம்பவைத்து பணம் பரித்து உள்ளனர் .
எனவே மக்களே, இனிமேலாவது உஷராக இருங்கள் , உங்க பணத்தை அங்கீகரிக்கப்பட்ட செயலிகளில் போட்டு பாதுகாப்பை உறுதி படித்திக்கோங்க .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்