நீங்கள் சேமிக்கும் சிறிய தொகையை அப்படியே 10 மடங்காக தருகிறோம், எங்க நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் என்பது போன்ற பல கவர்ச்சிகரமான விளம்பரங்களை பார்த்திருப்போம். ஆனால் அதை எந்த அளவுக்கு நம்புவது என்பதில் தான் சிக்கலே உள்ளது. குருவி சேர்ப்பதை போல கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கும் பணத்தை, அதிக லாபத்திற்காக நாம் எப்போதும் நழுவவிட கூடாது. ஆனால் அரசே ஏற்று நடத்தும் பல நல்ல திட்டங்களில் சேர்ந்து, பணத்தை முறையாக சேர்த்தால் உங்கள் சேமிப்புக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பது உறுதி.
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்
ஏற்கனவே பல அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம். அதில் ஒரு கணிசமான தொகையை சேர்த்து வைத்தால் சில ஆண்டுகள் கழித்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்பதை குறித்தும் பார்த்துள்ளோம். ஆனால் அப்படி சில காலம் கழித்து கிடைக்கும் பணத்தை, மீண்டும் சில காலம் சேமித்தால் இன்னும் அதிக லாபம் கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அதற்கும் ஒரு நல்ல வழி இருக்கின்றது.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்பது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் கல்வியை பொறுத்தே அமைகின்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆகவே அவர்கள் விரும்பும் கல்வியை திறன்பட அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி பெண் குழந்தைகளின் வாழ்கை தரத்தை மேன்படுத்த மத்திய அரசு துவங்கிய அஞ்சலக திட்டம் தான் செல்வமகள் சேமிப்பு திட்டம்.
உங்கள் பெண் குழந்தையின் முதலாம் வயது முதல் பணத்தை சேமித்து வந்தால், அவர் தனது 21வது வயதை எட்டும்போது சிறந்த ஒரு சேமிப்பு அவர் கையில் இருக்கும்.
திட்டமிடல்
உங்கள் பெண் குழந்தையின் 1வது வயது முதல் நீங்கள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1000 ரூபாயை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். 21 ஆண்டுகளின் முடிவில் 1,80,000 ரூபாயை நீங்கள் அசலாக சேர்த்திருப்பீர்கள். அதற்கான வட்டி மட்டும் உங்களுக்கு 3,74,000 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் நீங்கள் சேமித்த அசலோடு சேர்த்து உங்களுக்கு 21 ஆண்டுகள் கழித்து 5,54,000 ரூபாய் கிடைக்கும். அதாவது நீங்கள் போட்ட முதலைவிட சுமார் 4 மடங்கு லாபம் கிடைக்கும்.
இரட்டிப்பாகும் லாபம்
சரி 21 ஆண்டுகள் கழித்து உங்களுடைய மகளின் கையில் 5,54,000 ரூபாய் இருக்கும். இதில் அந்த அசல் தொகையை (1,80,000) அவரே வங்கியில் வைத்துக்கொண்டு, அந்த 3,74,000 ரூபாய் லாபத்தை மட்டும் மீண்டும் ஒரு 5 ஆண்டுகளுக்கு SIPயில் LUMPSUM முறையில் சேமிக்க வேண்டும். இப்படி செய்தால், அவர் சேமிக்கும் பணத்திற்கு 5 ஆண்டுகள் கழித்து 12.5 சதவிகித வட்டி மட்டும் சுமார் 3,00,000 ரூபாய் கிடைக்கும். ஆகவே உங்கள் பெண் சேர்த்த அசலோடு சேர்த்து 5 ஆண்டுகளின் முடிவில் அவரிடம் சுமார் 6,74,000 ரூபாய் இருக்கும்.
முதலில் நீங்கள் அவருக்காக சேர்த்த 1,80,000 + அவர் SIP மூலம் பெற்ற 6,74,000 ரூபாய் என்று உங்கள் பெண்ணின் 26வது வயதின் முடிவில் அவரிடம் 8,54,000 ரூபாய் இருக்கும். உங்களுடைய 1,80,000 ரூபாய் பணம், 26 ஆண்டுகளின் 8 மடங்காக உயர்ந்திருக்கும்.
குறிப்பு : SIPயை பொறுத்தவரை மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்றார் போல வட்டிவிகிதங்கள் மாறும். அதே நேரம் இன்னும் 20 ஆண்டுகளில் SIPயில் கிடைக்கும் வட்டிவிகிதம் 14 சதவிகிதத்தை எட்டினால் கூட ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்