ulip insurance  
வணிகம்

சேமிப்போடு கூடுதலான பல நன்மைகள் தரும் ULIP திட்டம் - என்ன அது? எப்படி இணைவது?

காப்பீட்டு திட்டத்தில் இணையும் நபரால் இதை ஆயுள் காப்பீட்டு திட்டமாக பயன்படுத்த முடியும்.

Anbarasan

வருமானம் ஈட்டுவதே பெரிய காரியமாக இருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், கேளிக்கைகளை கடந்து ஈட்டிய பணத்தை சேமிப்பது என்பது இன்னும் கடினமாகிறது. ஆனால் மக்கள் தங்கள் எதிர்காலத்திற்கான திட்டமிடலை சரியாக கணித்து சேமித்தால், நிச்சயம் பெரிய லாபம் கிடைக்கும். கடந்த சில நாள்களாகவே பல வகையான சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்த்து வருகின்றோம். இன்றும், நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் தரும் ஒரு காப்பீட்டு திட்டம் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.

காப்பீட்டு திட்டங்களில் பல வகை உண்டு, அதில் ஆயுள் காப்பீட்டு திட்டம் பற்றி தான் நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். அதுமட்டுமல்ல, பலரும் அதில் தான் பாலிசிகளை எடுத்திருப்போம். ஆனால் இன்று நாம் இந்த பதில் பார்க்கவுள்ளது ஒரு வித்யாசமான காப்பீட்டு திட்டமாகும். இதற்கு Unit Linked Insurance Plan என்று பொருள். அதாவது இதை ஒரு காப்பீட்டு திட்டமாகவும், அதே நேரம் ஒரு சேமிப்பு திட்டமாகவும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்திற்கு இப்பொது 8 சதவிகிதம் வரை வட்டிவிகிதம் வழங்கப்பட்டு வருகின்றது.

Unit Linked Insurance Plan

இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையும் நபரால் இதை ஆயுள் காப்பீட்டு திட்டமாக பயன்படுத்த முடியும். அதே நேரம் ஓய்வூதிய வருமானம், குழந்தைகளின் கல்விச்செலவு, சிறந்த முதலீடு உள்ளிட்டவற்றிகும் பயன்படுத்த முடியும். பாலிசிதாரர் தான் தேர்வு செய்யும் திட்டத்திற்கு ஏற்ப ஒட்டுமொத்தமாகவோ, மாதாமாதமோ அல்லது வருடத்திற்க்கு ஒருமுறையோ இந்த திட்டத்தில் பணத்தை சேமிக்க முடியும். சேமிக்க வேண்டிய காலம், மற்றும் அந்த சேமிப்பை முதலீடாக மாற்றும் காலத்தை பாலிசிதாரரே முடிவு செய்யலாம்.

இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது. (முதல் விளக்கம்)

நீங்கள் உங்கள் மகள் அல்லது மகனின் படிப்பு செலவிற்காக சேமிக்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். மாதந்தோறும் சுமார் 5000 ரூபாயை 10 ஆண்டுகளுக்கு சேமித்து, அதை 18 ஆண்டுகள் கழித்து எடுக்க திட்டமிடுகிறீர்கள். அப்படி என்றால் 10 ஆண்டின் முடிவில் 6 லட்சம் ரூபாயை அசலாக சேர்த்திருப்பீர்கள். மேலும் 18 ஆண்டுகள் கழித்து சுமார் 8 சதவிகித வட்டிவிகிதத்துடன் உங்களுக்கு சுமார் 16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இரண்டாம் விளக்கம்

நீங்கள் உங்களுக்கு கிடைத்த 5 லட்சம் ரூபாயை மொத்தமாக இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அதை சுமார் 10 ஆண்டுகள் கழித்து நீங்கள் எடுக்கும்போது 8 சதவிகித வட்டிவிகிதத்துடன் சுமார் 10 லட்சம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். ஆகவே இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பது உறுதி.

எப்படி இணைவது?

இந்த காப்பீட்டு திட்டம் இந்திய அளவில் பல வங்கிகளில் உள்ளது. அதே நேரம் சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். ஆகவே வங்கி அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி, உரிய விவரங்களை கேட்டறிந்து இந்த திட்டத்தில் நீங்கள் இணைய முடியும்.

மேலும் பாலிசி காலம் முடியும் முன்பே நீங்கள் பணத்தை திரும்ப பெற நினைத்தால், நிச்சயம் வட்டிவிகிதம் பெரிய அளவில் குறையும். மேலும் அதிக லாபம் எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த திட்டம் ஏற்புடையதாக இருக்காது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்