chennai is drwning 
சுற்றுச்சூழல்

விரைவில் மூழ்கப் போகிறதா சென்னை!? என்.டி.யூ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

காலநிலை மாற்றத்தால் கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும்...

Saleth stephi graph

சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 நகரங்கள் எந்தளவுக்கு மூழ்கி வருகின்றன என்பது குறித்து ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வில்  காலநிலை மாற்றத்தால் கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயம் கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டள்ளது.

இந்தியாவிலிருந்து சென்னை, உட்பட 5 நகரங்கள் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வுகள் மற்றும் ஐ.நாவின் மக்கள்தொகை தரவுகள் வாயிலாக இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 16 கோடி மக்கள் வாழ்வதாக பிபிசி மதிப்பிட்டுள்ளது

.அகமதாபாத்தின் சில பகுதிகள் 2014ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் சராசரியாக 0.01 செ.மீ-5.1 செ.மீ என்ற அளவில் மூழ்கி வருவதாக  நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிப்லஜ் பகுதி வேகமாக மூழ்கும் பகுதிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த பகுதியில் உடை தயாரிப்பு கொள்முதல் அதிகம் உள்ளன.  இப்பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 4.2 செ.மீ அளவில் மூழ்குகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

சென்னையின் சில பகுதிகள்  2014-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ-3.7 செ.மீ என்ற அளவில் மூழ்கியுள்ளதாக என்.டி.யூ. ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த பகுதிகளில் 14 லட்சம் பேர் வசிப்பதாக பிபிசி செய்தி முகமை மதிப்பிட்டுள்ளது.

சென்னையில் வேகமாக மூழ்கும் பகுதியாக தரமணி இருப்பதாக என்.டி.யூ ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அந்த பகுதி ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ அளவுக்கு மூழ்குவதாககூறப்படுகிறது. இது 2024 ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் ஏற்பட்ட 0.59 செ.மீ உயர்வுடன் ஒப்பிடப்படுகிறது என, நாசாவால் வழிநடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகள் வேகமாக மூழ்கிவருவதாக சென்னையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடும் காலநிலை மாற்றத்திற்கு முழுக்க முழுக்க மனிதனின் செயல்பாடுகளே காரணம், இந்த போக்கை தடுக்க . நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்கி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துதல் (map aquifers), சுற்றுச்சூழலில் நிகழ்த்தப்படும்  தாக்கங்கள்  குறித்த அறிக்கைகள் தரவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்