Mettupalaiyam pillur dam water level is increasing Admin
சுற்றுச்சூழல்

“அட மழை வெளுத்து வாங்குது..” “எந்தெந்த ஊருல எவ்வளவு மழை பெய்திருக்கு?” -Reporters அப்டேட்..!

இந்நிலையில் அரபிக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது.

Saleth stephi graph

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு கொஞ்சம் தனித்துவமான ஆண்டு தான். வெப்ப அலைகள் தாக் துவங்குவதற்கு முன்னரே பருவ மழை தொடங்கியுள்ளது. 

இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழைபெய்ய துவங்கிவிட்டது. சென்னை, காஞ்சிபுரம், கோவை, கடலூர், மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது.

கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் சிகப்பு  எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்காசி , தேனீ, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அரபிக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. நீலகிரி மாவட்டம் அவலஞ்சியில் இன்று 40 செ.மீ வரை மழை பெய்யும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

கேரளாவிலும் கனமழை தொடர்வதால் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட  8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு  இன்று அரசு விடுமுறை அளித்துள்ளது. 

மாவட்ட ரீதியான அப்டேட் 

மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டம் பகுதிகளில் இருந்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழக கேரளா எல்லை  பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழையானது பெய்து வருகிறது 

இந்த நிலையில் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு ஆன 100 அடியில் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 18 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது 

பவானி ஆற்றின் கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி நெல்லித்துறை எஸ் எம் நகர் ஆலங்கொம்பு சிறுமுகை லிங்கபுரம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

 பில்லூர் அணை நேற்று இரவு திறக்கப்பட்ட நிலையில் 18 ஆயிரம் கன அடி நீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்று வெளியேற்றப்பட்டு வருகிறது இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது  கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம் எல்லைப்பகுதியான  கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் ஆகிய  பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இரவு கம்பம் நகரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர்  பெருக்கெடுத்து கொண்டு ஓடியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை காரணமாக ஆங்காங்கே அருவி போல் மழை நீர் வடிந்து செல்கின்றன, இதனால் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் விரைந்து நிரம்பக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்