“காதலுக்கு தடையாக இருந்த பைனான்சியர்” - காதலை மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி.. ஆத்திரமடைந்த இளைஞர் வழிமறித்து கொலை!

ஊரில் கடை நடத்தி வரும் பெண்ணையும் தவறாக பேசியுள்ளார். எனவே வள்ளியப்பனுக்கும் அர்ஜுனுக்கும் இருந்த தகராறு
“காதலுக்கு தடையாக இருந்த பைனான்சியர்” - காதலை மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவி.. ஆத்திரமடைந்த இளைஞர் வழிமறித்து கொலை!
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சீனமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான அர்ஜுன். இவர் அதே பகுதியில் உள்ள 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மாணவியின் தாய்க்கு பைனான்ஸ் கொடுக்கும் அதே பகுதியை  சேர்ந்த வள்ளியப்பன்(45) என்பவர் அர்ஜுனை அழைத்து சிறுமியை விட்டு விலகுமாறு எச்சரித்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடமும் எடுத்துக் கூறி புரிய வைத்துள்ளார். எனவே சிறுமி அர்ஜுனிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த அர்ஜுன் வள்ளியப்பனையும் அதே ஊரில் கடை நடத்தி வரும் பெண்ணையும் தவறாக பேசியுள்ளார். எனவே வள்ளியப்பனுக்கும் அர்ஜுனுக்கும் இருந்த தகராறு பெரியதாகியுள்ளது. இதனால் 12 வகுப்பு மாணவியின் தாய் இது குறித்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஏற்கனவே தனது காதலை பிரிந்துவிட்டார் என வள்ளியப்பனின் மீது கோபத்தில்  இருந்த அர்ஜுன் மாணவியின் தாய் புகாரளிக்கவும் வள்ளியப்பன் தான் காரணம் என நினைத்து வள்ளியப்பனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அது போல நேற்று இரவு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வள்ளியப்பனை அறிவாளை பயன்படுத்தி சரமாரியாக வெட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வள்ளியப்பனின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு  அனுப்பிவைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளி அர்ஜுனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், காட்டுப்  பகுதியில் பதுங்கியிருந்த அர்ஜூனை கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com