chatgpt Admin
தொழில்நுட்பம்

"இதெல்லாம் பண்ணாதீங்க.. ரொம்ப காசு செலவாகுது".. OpenAI சிஇஓ

Ghibli-ஸ்டைல் இமேஜ் ஜெனரேஷன் மாதிரி புது ஃபீச்சர்ஸ் வந்ததால், பயனர்கள் அதிகமா ஆர்வமா இருக்காங்க. இதனால் சர்வர்ல சுமை அதிகமா இருக்கு, மேலும் கூலிங் சிஸ்டம்ஸ் மூலம் வெப்பத்தை கட்டுப்படுத்துறதும் செலவை உயர வைக்குது.

Anbarasan

இப்போ நம் அனைவரது வாழ்க்கையிலும் AI ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தங்களோட செமினார் வேலைகளை AI வைத்து ஈஸியா முடிச்சிடுறாங்க. ஜாப்-ல இருக்குறவங்க, மெயில் எழுதறதுக்கு AI-யை பயன்படுத்தி டைம் சேவ் பண்ணிடுறாங்க. சமையல் பண்ண மறந்த ரெஸிபியை AI-ல கேட்டு கத்துக்குறோம். கூடுதலா, Ghibli-ஸ்டைல் ஐமேஜ் ஜெனரேஷன் மாதிரி புது ட்ரெண்ட்ஸ் வந்ததால், கலை காதலர்களும் AI-யை ரசிக்க ஆரம்பிச்சாங்க. X-ல பார்த்தா, இப்போ 800 மில்லியன் பேர் வாரத்துக்கு ஒரு முறை ChatGPT-யை பயன்படுத்துதுன்னு சொல்றாங்க, இது உலக மக்கள்தொகையோட 10%. ஆனா இதுக்கு பின்னாடி ஒரு பெரிய செலவு இருக்குன்னு தெரியுமா? அதை பத்தி OpenAI-ன் CEO சாம் அல்ட்மன் சமீபத்தில் சொன்ன ஒரு விஷயம் நம்மை ஆச்சர்யப்படுத்துது.

OpenAI வரலாறு

OpenAI நிறுவனம் 2015-ம் ஆண்டு சாம் ஆல்ட்மன், எலான் மஸ்க், இல்யா சட்ஸ்கெவர், மற்றும் பல திறமையான நிபுணர்களால் தொடங்கப்பட்டது. இது முதல்ல ஒரு இலாப நோக்கற்ற (non-profit) நிறுவனமா இருந்து, பிறகு 2019-ல் OpenAI Global LLCன்னு ஒரு இலாப நோக்கமுள்ள (for-profit) கிளையை தொடங்கியது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியாவில உள்ளது. அவர்களோட முதல் நோக்கம் Artificial General Intelligence (AGI)னு சொல்லப்படுற, மனுஷரை விட சிறப்பா பணி செய்யும் AI-ஐ உருவாக்குவது தான். இதுக்கு அவர்கள் பெரிய முதலீடுகளைச் செய்து, Microsoft மாதிரி பெரிய நிறுவனங்களோட கூட்டணி சேர்ந்தாங்க. 2023-ல் Microsoft $10 பில்லியன் முதலீடு செய்து, OpenAI-ல் 49% பங்கு வாங்கி இருக்காங்க, இது அவர்களோட Azure கிளவுட் சர்வீஸை பயன்படுத்தி AI-ஐ மேம்படுத்த உதவுது.

OpenAI-ன் சிறப்பு தொழில்நுட்பங்கள்

OpenAI சில அற்புதமான AI கருவிகளை உருவாக்கி இருக்காங்க. ChatGPT, இப்போ உலகெங்கும் பிரபலமான ஒரு AI சாட் போட், இது 2022-ல் வந்ததுலிருந்து 800 மில்லியன் பேர் வாரத்துக்கு ஒரு முறை பயன்படுத்துறாங்க. இது கேள்விகளுக்கு பதில்கள் கொடுத்து, கட்டுரைகள் எழுதி, கூடுதலா படமும் உருவாக்கிடுது. DALL-Eன்னு ஒரு டெக்னாலஜி, இதுவும் டெக்ஸ்டை படமாக மாற்றி, கலைஞர்களுக்கு உதவுது. 2024-ல் Soraன்னு ஒரு டெக்ஸ்ட்-டு-வீடியோ மாடல் வந்து, ஃபிலிம் மேக்கர்களுக்கு புது வாய்ப்பை தந்துச்சு. சமீபத்தில் GPT-4.5, o1-preview மாதிரி புது மாடல்கள் வந்து, குறிப்பா கணிதம், கோடிங், மற்றும் அறிவியல் பணிகளுக்கு சிறப்பா பயன்படுது. இந்த மாடல்கள் ChatGPT Plus மற்றும் Team உறுப்பினர்களுக்கு அணுகலாம், இது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருது.

என்ன சொன்னார்?

OpenAI-ன் தலைவர் சாம் அல்ட்மன்னிடம், X-ல ஒரு பயனர் "ChatGPT-ல 'ப்ளீஸ்' 'தேங்க்யு' சொல்றதுக்கு OpenAI-க்கு எவ்வளவு மின்சார செலவு ஆகுதுன்னு?"ன்னு கேட்டு இருக்கார். அதுக்கு அல்ட்மன், "பத்து மில்லியன் டாலருக்கு மேல செலவு ஆகுது, ஏன்னா, நாம ChatGPT-ல "தேங்க்யு" சொன்னாலும், AI அதை புரிஞ்சு "யூ’ரு வெல்கம்"ன்னு பதில கொடுக்குறதுக்கு அதிகமா மின்சாரம் போகுது. ஒவ்வொரு கேள்விக்கும், வார்த்தைக்கும் சர்வர்ல கூடுதல் பவர் தேவைப்படுது, இதனால் கோடிகள் செலவாகுது" என்றார்.

Goldman Sachs ரிப்போர்ட்டோட, ஒரு ChatGPT-4 கேள்விக்கு 2.9 வாட்-ஹவுர்ஸ் எலக்ட்ரிசிட்டி போகுதுன்னு சொல்றாங்க, இது Google சர்ச் செய்யுறதை விட 10 மடங்கு அதிகம்! GPT-3 மாடலை பயிற்சி செய்ய 1,287 மெகாவாட்-ஹவுர்ஸ் எலக்ட்ரிசிட்டி போயிருக்குன்னு சொல்றாங்க, இது 120 அமெரிக்க வீடுகளுக்கு ஒரு வருஷத்துக்கு போதுமான மின்சாரமாம்!

குறிப்பா, Ghibli-ஸ்டைல் இமேஜ் ஜெனரேஷன் மாதிரி புது ஃபீச்சர்ஸ் வந்ததால், பயனர்கள் அதிகமா ஆர்வமா இருக்காங்க. இதனால் சர்வர்ல சுமை அதிகமா இருக்கு, மேலும் கூலிங் சிஸ்டம்ஸ் மூலம் வெப்பத்தை கட்டுப்படுத்துறதும் செலவை உயர வைக்குது.

இந்த மின்சார செலவு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். AI சர்வர்கள் உலக மின்சார உபயோகத்துல 2% செலவு பண்ணுதுன்னு சொல்றாங்க, இது பெரிய விஷயம். Google-ல் AI சர்ச் சேர்ந்தா, மின்சார உபயோகம் 10 மடங்கு உயரலாம், இது Ireland-ன் மின்சார உபயோகத்தை போல ஆகலாம். இதை குறைக்க, OpenAI சோலார் எனர்ஜி மற்றும் நியூக்ளியர் ஃப்யூஷன் திட்டங்கள்ல முதலீடு பண்ணி இருக்காங்க. சாம் அல்ட்மன் Helion Energyன்னு ஒரு நியூக்ளியர் ஃப்யூஷன் கம்பெனியில $375 மில்லியன் முதலீடு பண்ணி, Microsoft ஆதரவோட இதை முன்னெடுத்து இருக்கார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்