ஆப்பிள் நிகழ்ச்சியில் iPhone 18; முன்பதிவு தேதியில் மாற்றம் ஏன்? முழு விவரங்கள்!  AI Generated
தொழில்நுட்பம்

ஆப்பிள் நிகழ்ச்சியில் iPhone 18... லீக் ஆன புதிய அப்டேட்! முன்பதிவு தேதியில் மாற்றம் ஏன்?

செப்டம்பர் 9 நிகழ்வில், iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களுடன், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனும் (Foldable iPhone) அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை முரசு செய்தி குழு

ஆப்பிள் நிறுவனத்தில் புதிய CEO ஜான் டெர்னஸ் பதவியேற்ற பிறகு முதல் லான்ச் ஈவண்ட் வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஐஃபோன் 18 மாடல்களுடன் சில புதுமையான தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இத்துடன் வழக்கமாக ஆப்பிள் பின்பற்றும் முன்பதிவு (Pre-order) அட்டவணையில் இம்முறை ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 12, சனிக்கிழமை அன்று பசிபிக் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்குத் (இந்திய நேரப்படி (IST) சனிக்கிழமை பிற்பகல் 12:30 PM) தொடங்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

பொதுவாக ஆப்பிள் லான்ச் ஈவண்ட் முடிந்ததற்கு அடுத்த வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு தொடங்கும். ஆனால் இந்த செப்டம்பர் 11 அன்று, அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது நினைவு தினம் வருவதால், அந்த நினைவஞ்சலி நாளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முன்பதிவு தேதி சனிக்கிழமைக்கு (செப்டம்பர் 12) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

John Ternus, Apple CEO

இந்திய நேரப்படி புதன் (செப் 9) இரவு 10:30 மணிக்கு ஆப்பிள் லான்ச் ஈவண்ட் தொடங்கும். சனி (செப் 12) பகல் 12:30 மணிக்கு ஐஃபோன் 18 முன்பதிவு தொடங்கும்.

(முன்பதிவு நேரம் செய்தியறிக்கைகளில் வெளியான கணிப்பு மட்டுமே. ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

என்னென்ன கருவிகள் விற்பனைக்கு வருகின்றன?

இந்த செப்டம்பர் 9 நிகழ்வில், iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களுடன், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோனும் (Foldable iPhone) அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Foldable iPhone முன்பதிவு இந்த மாத இறுதியில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட எல்லா சீன நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஃபோன்களை அறிமுகப்படுத்திய பிறகுதான் ஆட்டத்துக்கே வந்திருக்கிறது ஆப்பிள். இதை ஒரு புதிய தொழில்நுட்பமாக பில்டப் கொடுப்பதா? என ஆப்பிள் ஹேட்டர்ஸ் விமர்சித்து வருகின்றனர்.

செப்டம்பர் 14 அன்று புதிய iOS 27 மென்பொருள் வெளியாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஐபோன் 11 மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களுக்குச் சப்போர்ட் செய்யும்.

iPhone 18 Pro மாடல்கள் செப்டம்பர் 18, வெள்ளிக்கிழமை முதல் ஆப்பிள் நேரடி விற்பனையகங்கள் மற்றும் பிற இணையதளங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்பதிவு மற்றும் விற்பனை தேதிகள் அனைத்தும் சர்வதேச பத்திரிகை தகவல்களின் அடிப்படையிலான கணிப்புகளே. செப்டம்பர் 9 அன்று நடக்கும் ஆப்பிள் நிகழ்ச்சியில்தான் அதிகாரப்பூர்வ தேதிகளை ஆப்பிள் நிறுவனம் முறைப்படி அறிவிக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்