புதுச்சேரி மாநில பாஜக தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் பதவியேற்றுக்கொண்டார். மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் தேர்தலில் 12 முதல் 15 இடங்கள் பாஜக போட்டியிடும், போட்டியிடும் என பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா தெரிவித்தார்
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக இருந்த செல்வகணபதியின் எம்.பி.யின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவருக்கான தேர்தல் பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினராக இருந்து பதவியை ராஜினாமா செய்த ராமலிங்கம் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரைத்தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராமலிங்கம் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 30) தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் முன்னிலையில் ராமலிங்கம் புதுச்சேரி மாநில தலைவராக பொறுப்பேற்று கொண்டார். நிகழ்ச்சியில் புதுச்சேரியிக்கான மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, முன்னாள் மாநில தலைவரும் எம்.பியுமான செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து புதிய நியமன உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் புதுச்சேரி மாநில பாஜக துணைத்தலைவர் GNS ராஜசேகரன், உசுடு தொகுதியை சேர்ந்த தீப்பாய்ந்தான், முதலியார்பேட் தொகுதியை சேர்ந்த செல்வம் ஆகியோர் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக விரைவில் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்க பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, 2026 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் தேர்தலில் 12 முதல் 15 இடங்கள் பாஜக போட்டியிடும், போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய புதிய தலைவர் ராமலிங்கம்,
தேசிய தலைமை என்னை நம்பி பொறுப்பு கொடுத்துள்ளது அதற்காக ஒவ்வொருவர் காலில் விழுந்தாதவது 2026 ஆம் ஆண்டு புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவேன் , இது எனக்கு மிக பெரிய பணி, கட்சியில் உழைப்பவர்களை தேடி தேடி பொறுப்பு கொடுப்பது தான் பாஜகவின் வழக்கம், தொண்டர்கள் தோலோடு தோல் கொடுத்து உழைத்தால் தான் 2026 ஆம் ஆண்டு ஆட்சியை பிடிக்க முடியும் என்றார்.
தலைவராக பதவியேற்றுள்ள ராமலிங்கம் கடந்த 2020ம் ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவருக்கு பாஜக நியமன எம்எல்ஏ பதவி வழங்கப்பட்டது. தற்போது தலைவர் பதவிக்காக அவர் நியமன எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவில் 1000க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று புதியதாக பதவியேற்றுள்ள ராமலிங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் பதவி ஏற்பு விழாவில் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினராக பாஜக மாநில துணை தலைவர் GNS ராஜசேகரன் விரைவில் பதவியேற்பார் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அவருக்கு கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
புதுச்சேரி மாநில பாஜக தலைவர் பதவியேற்பு விழா மரப்பலம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், புதுச்சேரிக்கான மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா, முன்னாள் தலைவர் செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது ராஜினாமா செய்யப்பட்ட 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதில் புதிதாக புதுச்சேரி மாநில பாஜக துணைத்தலைவர் GNS ராஜசேகரன், உசுடு தொகுதியை சேர்ந்த தீப்பாய்ந்தான், முத்தையார்பேட்டையை சேர்ந்த செல்வம் ஆகியோர் புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளதாக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரனா அறிவித்தார்.
இதனை தொடர்ந்து புதிய நியமன சட்டமன்ற உறுப்பினராக பதவியேர்க உள்ள GNS ராஜசேகரனுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக நிர்வாகிகள், காரைக்காலை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில பாஜக துணைத்தலைவர் GNS ராஜசேகரன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக நிகழ்ச்சியில் பெங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.