teen suicide - sourc NDTV 
இந்தியா

“அவங்கள சும்மா விடாதீங்க..” மெட்ரோ ரயிலில் பாய்ந்த 16 வயது சிறுவன்..! சாகுற அளவுக்கு என்ன பிரச்சனை..!? நெஞ்சை உலுக்கும் தற்கொலை கடிதம்!!

எனது உடலின் பாகங்கள் ஏதும் வேலை செய்தால் அதை தேவைப்படுபவருக்கு ....

மாலை முரசு செய்தி குழு

இந்தியா ஒரு Paradoxical சமூகம். இந்த முரண் நமது கல்வி நிறுவனங்களிலும் கூட எதிரொலிக்கின்றன. சில கல்வி நிறுவனங்களும் பள்ளிகளும், மாணவர்களை வரும் மதிப்பெண் சுமக்கும் எந்திரங்களாக பார்க்கும்போக்கு நாடு முழுவதும் பலகாலமாக, புழக்கத்தில் இருந்து வருகிறது. 

படிக்கும் பிள்ளைகளின் வாழ்வில் ஒழுக்கம் என்பது மிகத்தேவையான ஒரு பண்புநலன்தான் என்றாலும், அவற்றிற்காக குழந்தைகளின் உயிரையே கேட்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது, மேலும் சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் மனிதனின் வாழ்விலை மேம்படுத்த, எளிதாக்கதான் உருவாக்கப்பட்டதே தவிர, னித உயிரைவிட அதுவும் ஒரு குழந்தையின் உயிரைவிட அவை மேலானவை அல்ல. அதை சமூகமும், பெற்றோரும், கல்வி நிலையங்களும் உணர வேண்டும். 

அதிலும் சமீபத்திய இளம் வளரிளம் பருவத்தினரும், ‘impulsive’ -ஆன உளவியலில் தான் இருந்து வருகின்றனர். அவர்களிடம் எந்த மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதல் பெரியவர்களுக்கு இல்லாததுதான், சமகால இளைஞர்களை அதிக அளவிலான மரணத்தை நோக்கி தள்ளுகிறது. மேலும் சமீபமாக அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் தரும் அழுத்தத்தால் குழந்தைகள் உயிரிழக்கும் போக்கு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெரு நகரங்களில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்கள் கல்வியை முழுக்க முழக்க வியாபாரமயமாக்கியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, எல்லாரும் சமம், சமூகத்தில் உள்ள உயர்வு தாழ்வுகள் குழந்தைகள் மனதினுள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் சில பள்ளிகளே குழந்தைகளின் ‘confidecne’ -ஐ உடைத்து அனுப்பிவிடுகின்றனர். அப்படி ஒரு கோர சம்பவம்தான் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. 

teen suicide - sourc NDTV

டெல்லி மாணவர் தற்கொலை!

டெல்லியின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் படிக்கும் 16 வயது மாணவர் மெட்ரோ ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செய்வாய்க்கிழமை காலி 7.15 -க்கு பள்ளிக்கு சென்ற மாணவர், டெல்லியின் ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தின் 2 -வது பிளாட்ஃபார்மில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மதியம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை கடிதம் 

மாணவர் இறப்பதற்கு முன்பு தனது புத்தகப்பையில் தற்கொலை கடிதம் ஒன்றை விட்டுச்சென்றுள்ளார். அதில் ‘சாரி மம்மி, நான் பலமுறை உங்கள் இதயத்தை உடைத்துவிட்டேன்,  இறுதியாக நான் இதை செய்வதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். என்னைப்போல் வேறு எந்த மாணவனும், இந்த முடிவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் இப்படிசெய்தேன். அவர்கள் (ஆசிரியர்கள்) மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை.. எனது உடலின் பாகங்கள் ஏதும் வேலை செய்தால் அதை தேவைப்படுபவருக்கு தானம் செய்யுங்கள்” இவ்வாறாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

துன்புறுத்திய ஆசிரியர்கள்!

ஆனால் அந்த பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் மாணவனை உளவியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், ஆனால் இதுகுறித்து புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் நாடக பயிற்சியின்போது, மாணவனை, “ஓவரா நடிக்கிற” என மிகவும் அவமானப்படுத்தும் விதமா பேசியதாகவும், அப்போது பள்ளியின் முதல்வர் உடனிருந்து எதையும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.  

இவ்வாறாக தொடர் உளவியல் தாக்குதலுக்கு ஆளாகி வந்த மாணவருக்கு தேர்வு  மிக நெருக்கத்தில் இருந்ததால், தேர்வுக்கு பிறகு வேறு பள்ளியில் சேர்க்கிறோம் என பெற்றோர் உறுதியளித்தும் உள்ளனர். ஆனால் “கடந்த சில நாட்களாக ஆசிரியர்  ஒருவர் மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிட்டு, இடமாற்றச் சான்றிதழ் வழங்கி விடுவேன்”  என்று மிரட்டி வந்ததால் மாணவர் இம்முடிவை எடுத்ததாக கூட்டப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மாணவனின் தந்தை புகார் அழைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.