கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டுள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உண்டான நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஜம்மு -காஷ்மீரில் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள இடங்களில் தாக்குதல் நடந்தது.
தீவிரவாதிகளின் தற்கொலை முகாம்கள் உட்பட 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் இன்று பாதுகாப்பது படையினர் செய்தியாளர்களை சந்தித்தனர். வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியமிக்கா சிங் ஆகியோர் இந்த சந்திப்பில் தாக்குதலின் முழு விவரம் குறித்து விளக்கினர்.
“சியால்கோட், கோட்லி (அப்பாஸ் -முகாம்) பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பது. நள்ளிரவு 1.35 க்கு தொடங்கிய இந்த தாக்குதல் 25 நிமிடங்கள் நீடித்தது.
ஹேமர் வகை குண்டுகளை வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே இலக்காயிருந்தனர். மிகவும் துல்லியமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக” கர்னல் குரேஷி கூறினார். மேலும் இவர்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது படம் பிடிக்கப்பட்ட நிஜ நேர காணொளியையும் செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்தனர்.
முன்னதாக பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி “மதமோதலை தூண்டும் வகையில் பாகல்கம்பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளின் கட்டமைப்பை அழிக்கவே இந்த தாக்கல் நடத்தப்பட்டது. பயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் தவிறிவிட்டது. பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது. காஷ்மீர் வளர்ச்சியை தடுப்பதே பயங்கரவாதிகளின் நோக்கம்” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்