கேரளா வயநாடு பகுதியில் உள்ள மானந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீனா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுதீஷ் என்பவருக்கும் திருமணமாகி 14 வயதில் அனார்கா என்ற மகளும், 9 வயதில் அபி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரவீனாவிற்கும் சுதீஷுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பிரவீனாவிற்கும் திலீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது, இதனை சுதீஷ் அறிந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சுதீஷ் பிரவீனாவை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.இதனை பயன்படுத்திக் கொண்ட பிரவீனா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலுடன் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் பிரவீனா வீட்டில் வேலைகள் செய்யாமலும் , தொடர்ந்து வேறு ஒருவருடன் போனில் பேசி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி திலீஷுக்கும் பிரவீனாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதே போல (மே 25) அன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது திலீஷ் “ எப்போ பாத்தாலும் யார் கூட போன் பேசுற? என்ன உன் முதல் புருஷனை ஏமாத்தின மாறி என்னையும் ஏமாத்த பாக்குறியா?” என கேட்டுள்ளார். அதற்கு பதிலுக்கு பேசிய பிரவீனா “ நீ என்ன என்னை தொட்டு தாலி கட்டிய புருஷன் மாதிரி கேள்வி கேக்குற, வீட்டை விட்டு வெளிய போ இது என் வீடு” என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த திலீஷ், இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார் திலீஷ்.சமையலறையில் இருந்த கத்தியால் பிரவீனாவின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்து அழுத பெரிய மகள் அனார்காவை தாக்கிவிட்டு சிறிய குழந்தை அபியை தன்னுடன் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார் திலீஷ். பின்னர் அனார்கா தனது தாயின் போனை எடுத்து பாட்டிக்கு போன் செய்துள்ளார்.
உடனடியாக தனது மகள் வீட்டிற்கு வந்த, பிரவீனாவின் தாய் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி அனார்கா அளித்த தகவலின் படி திலீஷை தேடிவந்தனர்.
பின்னர் காட்டுக்குள் பதுங்கியிருந்த திலீஷை ட்ரோன் உதவியுடன் கண்டுபிடித்த போலீசார், அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு திலீஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்