
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பெரியதும்பூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 55 வயதான கவாஸ்கர். இவருக்கு திருமணமாகி 45 வயதில் உதயஜோதி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
அதிக கடன் சுமையில் இருந்த கவாஸ்கர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து கடனை அடைக்க முடிவு செய்துள்ளார். இதனால் KM டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கடந்த (ஜனவரி 14) தேதி சௌதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மூன்று ஏஜெண்டுகளிடம் கைமாறிய கவாஸ்கர் சௌதி அரேபியாவில் கால்நடை மேய்க்கும் வேலைக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்து தனது கணவரை மீட்டுத் தர கோரிக்கை வைத்த கவாஸ்கரின் மனைவி செய்தியாளர்களிடம் “ எனது கணவர் கடந்த ஜனவரி மாதம் குடும்ப கஷ்டத்தின் காரணமாக சௌதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றார். டிரைவர் வேலைக்கு என சொல்லி அழைத்து சென்று எனது கணவரை ஆடு மாடு மேய்க்க வைத்துள்ளனர்.
அவருக்கு சரியாக சாப்பாடு கொடுப்பதில்லை, அவர் எங்கு இருக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லையாம், அது மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் ஒரு சிலர் 50 வயதுடைய பெண்ணை வைத்து எனது கணவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள்.
மேலும் அங்கிருக்கும் கால்நடைகளுடன் எனது கணவரை பாலியல் செயலில் ஈடுபட சொல்லி அடிக்கிறார்கள். எப்போதாவது தான் என் கணவர் என்னுடன் போனில் பேசுவார். அவர் சொல்லி தான் இவ்வாறு நடப்பது எனக்கு தெரியும். கடந்த 15 நாட்களாக எனது கணவரிடம் இருந்து எந்த போனும் வரவில்லை எனவே எனக்கு பயமா இருக்கு அவரை காப்பாற்றி தாருங்கள்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மனுவை வாங்கிக்கொண்ட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து முறையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து, கவாஸ்கரை மீட்டு தருவதாக உதயஜோதியிடம் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்