bank strike Admin
இந்தியா

என்னது மார்ச் 24, 25 பேங்க் ஸ்ட்ரைக்கா? இந்த ஒரு ட்ரிக்க Use பண்ணி தப்பிச்சிக்கோங்க

பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்...

Anbarasan

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் உள்ள அனைத்து பணியிடங்களையும், அதில் ஊழியர்கள், அதிகாரிகள், இயக்குனர்கள் உள்பட நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் முறையே வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாடு முழுவதும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று வங்கி சங்கங்கள் முன்பே அறிவித்திருந்தன.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது.

வேலைநிறுத்தத்திற்கான முக்கிய கோரிக்கைகள்:

வாரத்தில் 5 நாள் வேலை அமல்படுத்த வேண்டும்.

பணித்திறனை ஆய்வு செய்தல் மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.

பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

அனைத்து பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பணிக்கொடைத் தொகைக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும்.

பேச்சுவார்த்தையின் நிலை:

வங்கி ஊழியர் சங்கங்களின் உயரிய அமைப்பான வங்கி சங்கங்கள் ஐக்கிய கூட்டமைப்பு, இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளது. வேலைநிறுத்தம் குறித்து முறைப்படி அறிவிப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்திய வங்கிகள் சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது வங்கி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள். ஆனால், வங்கிகள் சங்கம் கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

வேலைநிறுத்தம் உறுதி:

இந்திய வங்கிகள் சங்கம் எந்த கோரிக்கைகளையும் ஏற்காததால், வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எல். சந்திரசேகர், வேலைநிறுத்தம் மாற்றமின்றி மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெறும் என உறுதி செய்துள்ளார்.

நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது:

வங்கிகள் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இயங்காது. இதனால், மார்ச் 22 (சனி) மற்றும் மார்ச் 23 (ஞாயிறு) ஆகிய தினங்களுடன், மார்ச் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறுவதால், தொடர் நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாது. வாடிக்கையாளர்கள் தங்களது முக்கிய வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்