"கோவா காட்டுக்குள் கொல்லப்பட்ட பெங்களூரு பெண்.." 24 மணி நேரத்தில் காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்தது எப்படி? 
இந்தியா

"கோவா காட்டுக்குள் கொல்லப்பட்ட பெங்களூரு பெண்.." 24 மணி நேரத்தில் காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்தது எப்படி?

கடந்த ஆண்டு நடந்த கொலை காவல்துறையால் 24 மணி நேரத்தில் தீர்க்கப்பட்ட கதை இது!

மாலை முரசு செய்தி குழு

கோவா அருகில் உள்ள தர்பந்தோரா காட்டுப்பகுதியில் விவாசாயி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் சடலத்தைப் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த சுற்று வட்டாரத்தை மிரளச் செய்த இந்த வழக்கில் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியைப் பிடித்துள்ளனர் கோவா காவல்துறையினர்.

இறந்த பெண் பெங்களூருவில் ஒரு பள்ளியில் கற்பித்தல் அல்லாத ஊழியராக பணியாற்றியுள்ளார். 22 வயதாகும் அவர், தனது முன்னாள் வகுப்புத் தோழன் சஞ்சய் கெவின் என்பவருடன் கோவா சென்றுள்ளார். காவல்துறை சொல்வதன்படி, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

கெவின் கர்நாடகா மாவட்டத்தில் உள்ள ஹுப்பள்ளி நகரைச் சேர்ந்தவர். இவருக்கும் வயது 22. இருவரும் ஆவரியில் இருந்து கோவாவுக்கு பேருந்து ஏறியுள்ளனர்.

தர்பந்தோராவின் மொல்லம் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள பில்லிம் பகுதிக்கு சென்றுள்ளனர். காவல்துறை அறிக்கைபடி, கெவின் அந்த பெண் வேறு ஒரு ஆணூடன் பழக்குவதாக சந்தேகித்ததுடன் ஒரு கத்தியையும் தயாராக எடுத்துச் சென்றுள்ளார்.

புதர்கள் நிறைந்த பகுதியில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அவரது மொபைலை எடுத்துக்கொண்டு டாக்சியில் ஹுப்பள்ளிகக்குத் திரும்பியுள்ளார். இந்த குற்றத்தை எந்த தடயமும் இல்லாத "Blind Murder" என்றார் தெற்கு கோவா SP.

இந்த குற்றத்தை குற்ற நிகழ்வு தடயவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப பகுப்பாய்வுக் குழு மற்றும் மோப்ப நாய்ப் படைப் பிரிவுகள் உதவியுடன் கண்டறிந்து 24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.

24 மணிநேரத்துக்குள் சிக்கிய கொலையாளி

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பர்சில் பேருந்து டிக்கெட்டை காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த டீக்கெட்டுக்கு UPI மூலம் பணம் கொடுத்து பெறப்பட்டிருந்ததால், கெவினின் மொபைல் நம்பரை கண்டறிந்துள்ளனர்.

கெவினிடம் விசாரணை நடத்தியதில் கோவா பயணத்தின் போது இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றதும், உறவில் ஏற்பட்ட பிரச்சனைகளால் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்