இந்தியா

பீகாரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? சற்று நேரத்தில் எண்ணப்படும் வாக்குகள்.. வெற்றி யாருக்கு?

அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது...

Mahalakshmi Somasundaram

பீகாரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் தெரியுள்ளது. முதற்கட்டமாக (நவம்பர் 06) ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 65.8% வாக்குகள் பதிவான நிலையில் (நவம்பர் 11) ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 68.76 % வாக்குகள் பதிவான நிலையில் மொத்தமாக 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை பீகாரில் நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு எண்ணிக்கையாக உள்ளது.

வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களும் ‘விவிபாட்’ எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைகளின் வளாகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கப்பட இருக்கிறது.

எனவே காலை 9 மணிமுதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும் எனவும் மத்திய பார்வையாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் எண்ணிக்கையில் வாக்குகள் எண்ணப்படும். மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையானது முழுவதுமாக வீடியோ கட்சியாக பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்கப்பட உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

கருத்துக்கணிப்புகள் படி நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என சொல்லப்படும் நிலையில் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வினி யாதவ் “கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் ஒரு உளவியல் அழுத்தம், மாற்றம் உறுதி 18 ஆம் தேதி பதவி ஏற்பு நடைபெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தொடர்ந்து 5 முறையாக நிதிஷ் குமார் ஆட்சியை பிடிப்பாரா? இல்லை எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்கப்போகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.