Bihar: பாஜக கோட்டையை உடைத்த பிராசாந்த் கிஷோர்  jsp
இந்தியா

Bihar: பாஜக கோட்டையை உடைத்த பிரசாந்த் கிஷோர் - வெற்றிக்கு பிறகு சொன்னதென்ன?

கடந்த தேர்தல்களில் நேரடியாக களமிறங்காத பிரசாந்த் கிஷோர், பாங்கிபூர் இடைத்தேர்தலில் தானே போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

malaimurasu.com

பீகார் மாநிலம் பாங்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) நிறுவனரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் வெற்றிபெற்றுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜ்யசபா உறுப்பினரான பிறகு, அவரது பாங்கிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், பாஜக சார்பாக நீரஜ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் ரேகா குமாரி ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

இதில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றிபெற்றுள்ளார்.

தொடர் தோல்விகளுக்கு முடிவு!

இந்தியா முழுவதும் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோர், 2024-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது.

சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் ஜேஎஸ்பி தோல்வியடைந்தது. அதிலும், 236 தொகுதிகளில் டெபாசிட் கூட பெறவில்லை.

வெற்றியைக் கொண்டாடும் ஜேஎஸ்பி

இதனால் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது கார்ப்பரேட் பாணி அரசியல், மக்கள் களத்தில் எடுபடவில்லை என்றும், 'ஏசி ரூம் அரசியல்வாதி' என்றும் பரிகாசிக்கப்பட்டார்.

கடந்த தேர்தல்களில் நேரடியாக களமிறங்காத பிரசாந்த் கிஷோர், பாங்கிபூர் இடைத்தேர்தலில் தானே போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது வழக்கமான சாதி, மதப் பிரச்சினைகளைக் கடந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் குடிமை விவகாரங்களில் பாஜக அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டியதே அவரது வெற்றிக்கு உதவியிருக்கிறது.

2008-ம் ஆண்டு பாங்கிபூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து பாஜகவின் கோட்டையாக இருந்துவந்த நிலையில், தனது கொடியை ஏற்றியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

தேர்தல் வெற்றி குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "இது சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல, இந்த மாநிலத்துக்கு நல்ல முதலமைச்சர் வேண்டும் என்ற பீகார் மக்களின் குரல் இன்று எதிரொலித்துள்ளது." எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.