nithish kumar 
இந்தியா

“ஹிஜாபுக்கு பதில் வேற எதையாவது தொட்டிருந்தால்..” பாஜக அமைச்சரின் முகம் சுளிக்க வைக்கும் கருத்து..! வலுக்கும் எதிர்ப்புகள்!!

அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி இதை "அருவருப்பான செயல்" என்று விமர்சித்துள்ளது. மேலும், "இந்த வெட்கக்கேடான செயலை...

மாலை முரசு செய்தி குழு

கடந்த பீகார் தேர்தலில்  காங்கிரஸ், RJD -யின் மஹாகட்பந்தன் கூட்டணியை பாதாளத்திற்கு தள்ளி, , NDA கூட்டணி 203 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 

நிதிஷ் குமார் 10 -வது முறையாக பீகாரின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் மாநிலத்தின் காவல், உள்துறை அனைத்தும் பாஜக -வசம் உள்ளது. ஏற்கனவே நிதிஷ் ‘பொம்மை முதல்வராகத்தான் உள்ளார்’ என எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி விமர்சித்து வருகிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் வாய்க்கு வேலைத்தரும் செயலில் நிதிஷ் ஈடுபட்டுள்ளார். இது பெரும் பேசு பொருளாகி உள்ளது. 

திங்கட்கிழமை பாட்னாவில் கார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண் மருத்துவருக்கு பணி நியமனக் கடிதம் வழங்கும்போது அவரது ஹிஜாபை அகற்றிய காட்சி இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் நிகழ்வு முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. பணி நியமனக் கடிதங்களை வழங்கும் போது, நுஸ்ரத் பர்வீன் என்ற மருத்துவர்  தனது கடிதத்தைப் பெற  முன்னால் வந்தார். 

பிறகு, முதல்வர் நிதிஷ் குமார் அந்தப் பெண்ணின் தலையில் கட்டப்பட்டிருந்த ஸ்கார்ஃபைச் சுட்டிக்காட்டி, அதைப் பற்றிக் கேட்டு, பின்னர் அவரின் அனுமதியின்றி அவரே அதை அகற்றினார். இந்த நேரத்தில், நிகழ்ச்சியில் இருந்தவர்கள் சிரிக்கத் தொடங்கியதால், பெண் மருத்துவர் முகம் அசௌகரியமாக மாறியது. 

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, இந்த சம்பவத்தின் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து, "நிதிஷ் ஜீக்கு என்ன ஆனது? அவரது மனநிலை முற்றிலும் மோசமடைந்துவிட்டதா, இல்லை நிதிஷ் பாபு இப்போது 100% சங்கியாகிவிட்டாரா?" என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி இதை "அருவருப்பான செயல்" என்று விமர்சித்துள்ளது. மேலும், "இந்த வெட்கக்கேடான செயலைப் பாருங்கள். ஒரு பெண் மருத்துவர் தனது பணி நியமனக் கடிதத்தைப் பெற வந்தபோது, நிதிஷ் குமார் அவரது ஹிஜாபை பிடித்து இழுத்தார். மாநிலத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபர் பொதுவெளியில் இப்படி ஒரு செயலைச் செய்தால், பெண்கள் பாதுகாப்பு பல்லிளிக்கிறது என்பதையே காட்டுகிறது. இது மன்னிப்புக்குக்கூட தகுதியற்றது. உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்." என்று விமர்சித்திருந்தார். 

இந்த சூழலில்தான் நிதிஷின் செயலை எதிர்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து பாஜக அமைச்சர் ஒருவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது, யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மீன் வளத்துறை அமைச்சராக உள்ள சஞ்சய் நிசாத்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “நிதீஷ் -ம் மனிதர்தானே, எதற்கு அவரை இப்படி துரத்துகிறீர்கள்? ஹிஜாபை பிடித்து இழுத்ததற்கே இவ்வளவு பஞ்சாயத்து என்றால், வேறு எதையாவது பிடித்திருந்தால்..” என சொல்லி சிரித்தார்.

சஞ்சய் நிசாத் ஒரு ஜாதி கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இந்த கொச்சையான கருத்தை எதிர்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். ஏற்கனவே பாஜக ஆட்சி அமைத்ததலிலிருந்து, தலித், சிறுபான்மையினர் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அக்கட்சியினர் சாதிய மாற்றம், ஆணாதிக்க மனநிலையையும் காட்டுவதாகவும், மத ரீதியிலான அவர்களின் வெறுப்பு முகம் எவ்வளவு கோரமானது என்பதையும் காட்டுவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.