bjp's next national leader 
இந்தியா

யார் அந்த தீதி!? 'பாஜக -வின் அடுத்த தேசியத்தலைவர் நிச்சயம் பெண் தான்..!' வானதி ஸ்ரீனிவாசனுக்கு வாய்ப்பா!?

பிஜேபியின் தேசியத்தலைவர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்க உள்ளது. இந்நிலையில் அது யாராக இருக்கலாம் என்கிற ஆராய்ச்சிகள்...

Saleth stephi graph

பாஜக -வின் தேசியத் தலைவராக இருக்கும் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தேசியத்தலைவர் தேர்வு நடைபெற இருக்கிறது. அந்த கட்சியின் விதிமுறைகளின்படி தேசியத்தலைவர் பதவி 3 ஆண்டுகளுக்கு மட்டும்தான்.  குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்ததை அடுத்து, மத்திய அமைச்சராக பதவியேற்றார். தற்போது அவர், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், விரைவில் பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த வாரம் பிஜேபியின் தேசியத்தலைவர்   யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்க உள்ளது. இந்நிலையில் அது யாராக இருக்கலாம் என்கிற ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜக -வின் அடுத்த தேசிய தலைவர் ஒரு பெண்தான் என்பது  ஊர்ஜிதமாகிவிட்ட நிலையில், நால்வரின் பெயர் பரிந்துரை பட்டியலில் இருப்பதாக தெரிகிறது.

யார் அந்த நால்வர் 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி மற்றும் திரிபுராவின் தீதி என்று அழைக்கப்படும் பிரதிமா பௌமிக்?ஆகிய நால்வரில் யாரோ ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.

யார் அந்த தீதி 

திரிபுராவை சார்ந்த பிரதிமா பௌமிக்  திரிபுரா மக்களால் தீதி என்றுதான் அழைக்கப்படுகிறார். பிரதிமா பௌமிக் 2019 ல்மேற்கு திரிபுரா லோக்சபா தொகுதியின் எம்பியாகி மத்திய சமூக நலத்துறை அமைச்சராகி வட கிழக்கு மாநிலங்களின் இரண்டாவது பெண் மத்திய அமைச்சர் என்கி ற பெருமையை பெற்றவர்.

ஏன் வானத்திற்கு முக்கியத்துவம் 

சட்டமன்ற உறுப்பினர் வானத்தை, தமிழக பாஜக மகளிரணி தலைவராகவும் உள்ளார். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது பாஜக -வின் பல நாள் செயல்திட்டத்தில் ஒன்றாக இருக்கிறது. அதற்காக அது எடுத்த அத்துணை முயற்சிகளும் தோல்வியையே சந்தித்துள்ளன. தற்போது வானதி ஸ்ரீனிவாசனை பாஜக தேசிய தலைவராக மாற்றுவதன் மூலம் தமிழகத்தில் இன்னும் ஆழமாக வேரூன்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.