delhi - agra  
இந்தியா

கண்ணை மறைத்த பனி.. அதிகாலையில் கேட்ட ஓலம்!! டெல்லி-ஆக்ரா சாலையில் பெரும் தீ விபத்து!! 4 -பேர் பலி!

அதீத காற்று மாசால் ஆக்ரா முழுவதும் புகையால்...

மாலை முரசு செய்தி குழு

இன்று அதிகாலை டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் பல பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தலைநகர்  டெல்லியில் கடும் காற்று மாசு நிலவி வருகிறது. இதனால் ஏற்கனவே அங்குள்ள மக்கள் பலவிதமான இன்னல்களை தாங்கி வருகின்றனர். மேலும் டிசம்பர் மாதங்களில் அப்பகுதியில் கடுமையான பனிப்பொழிவும் ஏற்படும். இதனால் சாலை விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. 

இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தின் மதுராவின் டெல்லி-ஆக்ரா விரைவுச்சாலையில் பல பேருந்துகள் அடுத்தது மோதி ஏற்பட்ட கோர விபத்தில் தற்போது வரை 4 -பேர் உயிரிழந்துள்ளனர். அதீத காற்று மாசால் ஆக்ரா முழுவதும் புகையால் மூடப்பட்டுள்ளது. மேலும், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மக்கள் கண்களுக்கு புலப்படாத வகையில், முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்