CPR  
இந்தியா

இந்தியாவின் 15 -வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ஆர்!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில்

malaimurasu.com

கடந்த ஜூலை 21 - ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்திருந்தார். அவரின் ராஜினாமா கடிதத்தையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக்கொண்டிருந்தார். 

தன்கருக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும்போதே அவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இந்தியாவில் குடியரசு துணை தலைவர் பதவி காலியாகிருந்தது.  குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு  சி.பி.ராதாகிருஷ்ணன் -ஐ பாஜக வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்தது. இந்நிலையில் கடந்த செப்.10 -ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக -வுக்கு பெரும்பான்மை இருப்பதால், சி.பி.ஆர் -தான் வெல்வார் என சொல்லப்பட்டது. அதன்படியே செப்.10 அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்  வெளியானது. அதில் நினைத்தபடியே சி.பி.ஆர் தான் வெற்றிபெற்றார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இன்று சி.பி.ஆர் இந்தியாவின் 15 -ஆவது குடியரசு துணை தலைவராக பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  முன்னாள் துணை குடியரசு தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆனால் இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ளவில்லை. இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் 3 -ஆவது தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.