இந்தியா

ரூ 200 உயரும் வர்த்தக சிலிண்டர்! ஒன்றிய அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்.. என்னவாகும் பெட்ரோல் டீசலின் விலை?

சென்னையில், ரூ.203 விலை உயர்வுக்குப் பிறகு வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,246 ஆக இருக்கும்..

மாலை முரசு செய்தி குழு

ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் கூட்டுத்தாக்குதல் நடத்திவரும் காரணத்தால் இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை அன்று 19 கிலோ வர்த்தக சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளன. 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலை ரூ.51 உயர்ந்துள்ள நிலையில், 19 கிலோ வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.195லிருந்து ரூ.218 வரை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேற்கு ஆசியாவில் விரிவடைந்து வரும் மோதலுடன் இந்த விலை உயர்வு நேரடியாகத் தொடர்புடையது, இது சர்வதேச எரிசக்தி விநியோகச் சங்கிலிகளை கடுமையாக பாதித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் 50% உயர்ந்துள்ளன. இதற்கு வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதே முக்கியக் காரணமாகும். பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் பல பகுதிகளில் எல்பிஜி சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை 19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பையில் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.195.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வர்த்தக சிலிண்டரின் புதிய சில்லறை விலை ரூ.2,031 ஆக உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ.2,078.50 ஆக இருந்தத நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில், விலை ரூ.218 உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூ.2,208.50 ஆக உள்ளது. சென்னையில், ரூ.203 விலை உயர்வுக்குப் பிறகு வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,246 ஆக இருக்கும். இருப்பினும், எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தவில்லை. வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை கடைசியாக மார்ச் 7 அன்று ரூ.60 உயர்த்தப்பட்டது. டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.913ஆக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றமின்றி உள்ளன. தற்போது வரை எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.