தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ்குமார் பதவி விலக கோரி இன்று (அக் 10) போராட்டம் நடைபெறும் என சிஜேபி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. முன்னதாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்விதுறை அமைச்சரை பதவி விலகக் கோரி நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய தலைமை தேர்தல் அதிகாரியான ஞானேஷ் குமார் வாக்காளர் திருத்தப்பட்டியலில் தன்னிச்சையாக செயல்பட்டது குறித்து நாளிதழில் வெளியான செய்தியில் இருந்து நாடெங்கும் மிகப்பெரிய பேசுபொருளாக இது மாறியது.
இதனைத்தொடர்ந்து, சிஜேபி சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், மாணவ அமைப்புகள் உட்பட யூட்டியூபரான துருவ் ரத்தே உட்பட பலர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், துருவ் ரத்தே காவலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, டெல்லியில் மெட்ரோகள், இணையதளம் உள்ளிட்டவை முடக்கப்பட்ட நிலையில் காலையில் இருந்தே போலீசார் குவிக்கப்பட்டு வந்த நிலையில், காலையில் ஜந்தர் மந்தரில் கூடிய 600 பேரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது விமானத்திற்குள்ளேயே வைத்தே அபிஜித் கைது செய்யப்பட்டுள்ளார். சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோரும் விமானம் தரையிறங்கியதும் தடுத்து வைக்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அபிஜித்தை கைது செய்தபோது, “வாருங்கள், எங்களைக் கைது செய்யுங்கள்! நாங்கள் கைது செய்யப்படுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் உங்களுக்குப் பயப்படவில்லை. எங்களைக் கைது செய்யுங்கள்!” என்று அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். மேலும்,காவல்துறையின் நடவடிக்கையை சர்வாதிகாரமானது என்று அபிஜித் விமர்சித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்