இந்தியா

நாகாலாந்து செல்கிறார் திரௌபதி முர்மு!

அரசு விருந்தினர் அரங்கத்தில் பண்பாட்டு நிகழ்ச்சி மற்றும் அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் இரண்டு நாள் பயணமாக நாகாலாந்து செல்கிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குடியரசுத் தலைவரின் நினைவாக, நவம்பர் 2 ஆம் தேதி மாலை 3 மணிக்கு கொஹிமாவில் உள்ள தலைநகர் பண்பாட்டு அரங்கத்தில் குடிமக்கள் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என்று கடந்த அக்டோபர் 28 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பண்பாட்டு நிகழ்வு

நவம்பர் 2 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு கோஹிமாவில் உள்ள முதலமைச்சர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் அரங்கத்தில் பண்பாட்டு நிகழ்ச்சி மற்றும் அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

அனைத்து துறைகளின் நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசுத் துறைதகளின் செயலாளர்கள் பண்பாட்டு நிகழ்ச்சி மற்றும் அரசு விருந்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். நாகாலாந்தில் உள்ள பழங்குடியினர் அமைப்புகளும் குடிமக்க வரவேற்பு நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அனைவரும் முகக்கவசம் மற்றும் பாரம்பரிய உடை அணிந்து பொதுமக்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.