இந்தியாவில் நமது தேசத்தை தாயாக போற்றி வணங்குவது வழக்கம். எனவே தான் நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் நமது தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தும். பல போர்களில் நம் நாட்டிற்காக உயிர் தியாகமும் செய்து வருகின்றனர்.
அவர்களின் உயிர் தியாகங்கள் வீரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டாலும், ஒரு வீரனின் உயிரிழப்பு என்பது நாட்டுக்கு சோகத்தையும், அவர்களது குடும்பத்திற்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.
எனவே ராணுவத்தில் உயிரற்ற ரோபோக்களை பயன்படுத்துவதன் மூலம் உயிரிழப்பை தடுத்தும். சில ஆபத்தான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எதிரிகளை அளித்தும். நம் நாட்டில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கலாம் அது மட்டுமல்லாமல் மற்ற நாடுகளைவிட வளர்ந்த ராணுவ தொழில்நுட்பங்களையும் ரோபோக்களை பயன்படுத்துவதால் நம்மால் கையாள முடியும் என்கிறது ஒரு தனியார் நிறுவன ஆய்வு.
இதை செயல்படுத்தும் விதமாக இப்போது மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள “பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்” மனிதர்களை போலவே செயல்படும் ரோபோக்களை ராணுவத்திற்காக தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனை குறித்து தகவல் வெளியிட்டுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறியியல் குழு தலைவர் டலோளி “பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய ராணுவத்திற்காக மனிதர்களை போன்று செயல்படும் ரோபோக்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும்
போர்க்களத்தில் வீரர்களின் உயிரிழப்பை தடுக்கவும் கடினமான சூழல்களை கையாளும் வகையிலும் மலைப்பகுதிகளில் பணியாற்றும் வகையிலும் ரோபோக்கள் வடிவமைக்கப் படுவதாகவும். அதுமட்டுமல்லாமல் இந்த ரோபோக்கள் மனிதனை போலவே கட்டைளையை பெற்று உடனே செயல்படும் திறனை உடையவையாகும். சில ரோபோக்களின் நேரடி தாக்குதலை கையாளும் விதமாக எடை குறைவான ஆயுதங்கள் பொறுத்தப்பட்டுள்ளதகவும்” கூறியுள்ளார்.
இந்த முயற்சி வெற்றி அடைந்தால் ராணுவத்தில் வீரர்களுக்கு ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க முடியும் என்றும். மிக துரிதமாக செயல்பட்டு எதிரியின் திட்டத்தை முறியடிக்க முடியும். என்றும் டாலொளி தெரிவிக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்