இந்தியா

"என் புள்ளையோடவே இருக்கிறேன்".. மகனின் கல்லறையை விட்டு நகர மறுக்கும் தந்தை! 'RCB கொண்டாட்ட கொடுமை'-யின் மற்றொரு அவலம்!

“நான் இங்கேயே இருக்க விரும்புறேன்”னு மனம் உருகிய காட்சி இப்போ எல்லாரையும் கலங்க வெச்சிருக்கு.

மாலை முரசு செய்தி குழு

பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் 2025 வெற்றியை கொண்டாட நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சோகம் உலகத்தையே உலுக்கியிருக்கு. இந்த துயரத்தில், 21 வயசு இளைஞர் பூமிக் லக்ஷ்மணனும் உயிரிழந்திருக்கார். இவரோட தந்தை பி.டி. லக்ஷ்மணம், மகனின் கல்லறையில் கதறி, “நான் இங்கேயே இருக்க விரும்புறேன்”னு மனம் உருகிய காட்சி இப்போ எல்லாரையும் கலங்க வெச்சிருக்கு.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, 18 வருஷ காத்திருப்புக்கு பிறகு ஐபிஎல் 2025 கோப்பையை வென்றதை கொண்டாட, பெங்களூரு எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் புதன்கிழமை (ஜூன் 4, 2025) ஒரு நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக அரசும், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் (KSCA) இணைந்து ஏற்பாடு செஞ்ச இந்த நிகழ்ச்சி, விராட் கோலி, ரஜத் பட்டிதார் மாதிரியான வீரர்களை கௌரவிக்குறதுக்காக நடத்தப்பட்டது

ஸ்டேடியத்தோட உள்ளே 35,000 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், ஸ்டேடியத்துக்கு வெளியே, சுமார் 2-3 லட்சம் பேர் கூட, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாம, நெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்து, 47 பேர் காயமடைந்தாங்க. இந்த உயிரிழப்புகளில், 21 வயசு இளைஞர் பூமிக் லக்ஷ்மணனும் ஒருவர்.

இந்நிலையில், ஹாசன் மாவட்டத்துல உள்ள தங்களோட சொந்த ஊரில், பூமிக் லக்ஷ்மணனோட கல்லறையில், தந்தை பி.டி. லக்ஷ்மணம் கதறி அழுத வீடியோ இப்போ எல்லாரையும் உலுக்கியுள்ளது. மகனின் கல்லறையில் "நான் இங்கேயே இருக்க விரும்புறேன், வேற எங்கயும் போக விரும்பலை”னு மண்ணுல புரண்டு அழுதிருக்கார். “என் மகனுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக் கூடாது”னு கண்ணீரோட கூறியிருக்கார்.

பூமிக், ஒரு இறுதியாண்டு பொறியியல் மாணவர். RCB அணியின் தீவிர ரசிகராக இருந்தவர், வெற்றி கொண்டாட்டத்துல பங்கெடுக்க ஸ்டேடியத்துக்கு நண்பர்களோட போயிருக்கார். ஆனா, நெரிசலில் தனியாகி, திரும்பி வர முடியாம உயிரிழந்திருக்கார். இந்த நிலத்தை, மகனோட எதிர்காலத்துக்காக வாங்கியிருந்த தந்தை, இப்போ அதே நிலத்துல மகனை புதைச்சு, மனம் நொந்து போயிருக்கார்.

எந்த தவறுமே செய்யாத இந்த தந்தையின் கண்ணீருக்கு பதில் சொல்லப் போவது யார்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.