தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சென்னை திரும்பவுள்ள மக்கள், சென்னை விமானத்தின் கட்டண உயர்வால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேர்தலில் வாக்களிக்க தங்களின் சொந்த ஊருக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பேருந்து மற்றும் ரயில்களின் வந்தவர்கள் ஞாயிற்று கிழமைகளில் சென்னையை வந்தடைந்தனர். இதனால் தாம்பரம் போன்ற பகுதிகளிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் போக்குவரத்துக்கு நெரிசல் காணப்பட்டது. மேலும், மக்களின் கூட்டமும் அலைமோதிய படி காணப்பட்டது. இந்நிலையில் பலருக்கும் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு பேருந்தோ அல்லது ரயிலோ கிடைக்காமல் இருந்த நிலையில் அவர்கள் சென்னை வர விமானத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த சமயத்தில் விமானக்கட்டணத்தின் விலையை அந்த நிறுவங்கள் நேற்று இரவிலிருந்து பலமடங்காக உயர்த்தி இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை போன்ற பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதன்படி உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் பின்வருமாறு: மதுரை-சென்னை வழக்கமான கட்டணம் ரூ5.099, உயர்த்தப்பட்டுள்ள கட்டணமாக ரூ. 32,508-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - சென்னை வழக்கமான கட்டணமாக ரூ. 5,354, ஆனால் தற்போது ரூ. 17,087- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருச்சி - சென்னை வழக்கமான கட்டணமாக ரூ. 4,551 ஆனால் தற்போது, ரூ. 14,310-ஆக உயர்ந்துள்ளது. கோவை - சென்னை வழக்கமான கட்டணமாக ரூ. 4,634 தற்போது ரூ. 11,149 ஆக நிர்ணயித்துள்ளனர். இந்த விலை உயர்வால் தென்மாவட்டங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே போரின் காரணமாக உலகளவில் பல்வேறு விமனநிலையங்கள் தங்களது விமான விலையை அதிகமாக நிர்ணயித்துள்ள நிலையில், தற்போது தேர்தலை முடித்து மீண்டும் இறுதி நேரத்தில் சென்னை திரும்பும் மக்களுக்கு உள்நாட்டு விமானங்கள் விலையை உயர்த்தி இருப்பது பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.