

18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஒட்டி பிடிபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது மேலும் அவர்களின் பெற்றோருக்கு 3 வருடங்கள் சிறை, ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் மற்றும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. வண்டி ஓட்டும் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதிலும் காவல்துறை சிக்கல் ஏற்படும் என அறிவித்துள்ளது. அதாவது 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஒட்டி பிடிபட்டால் அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தகுதியை இழக்க செய்யும் என்றும் எச்சரித்துள்ளனர். அதாவது 18 வயதுடையவர்களுக்கு கியர் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் ஓட்டலாம். ஆனால் இதை போன்ற விதிமீறல் செயலில் ஈடுபட்டால் அவர்களின் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற இயலாத நிலை ஏற்படும்.
புதுச்சேரி முதுநிலை போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை புதுச்சேரி பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். அதில், ஓட்டுநர்கள் மற்றும் நடைபயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளர். அதன்படி சிறார்கள் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்ததாகவும், குறைந்த வயதில் வாகனங்களை ஓட்டுவதால் அதிகளவு போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படுவதாகவும், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். குறைந்த வயதில் வாகனம் ஓட்டுபவர்கள் பயிற்சி, சட்டபூர்வ அனுமதி இல்லாமல் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்துகிறார்கள். இதனால் பொது மக்கள் பாதுகாப்பும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி ஒரு முக்கிய சுற்றுலா நகரமாக இயங்கி வருகிறது. அங்கே வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பெரிதும் வாகன பயன்பாட்டை சார்ந்தவர்கள். இதனால் மாநிலம் எப்போதும் பரபரப்பான சாலைகளும் நடைப்பதைகளும் கொண்டுள்ளது. எனவே போக்குவரத்து துறை இது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்து அதுகுறித்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லது பெற்றோர் குற்றவாளியாக கருதப்பட்டு அவர்களின் மீது வழக்கு பதியப்படும். மேலும் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். முக்கியமாக அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். விதிகளை மீறி வாகனம் ஓட்டும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் கள். அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவும்12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். புதுச்சேரியில் கடந்த 3 நாட்களில் மட்டும் குறைந்த வயது வாகனம் ஓட்டுதல் வழக்கில் 30 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
மோட்டார் வாகன திருத்தச் சட்டம் 2019 - பிரிவு 199A படி மைனர் வாகனம் ஓட்டும்போது பிடிபட்டால், வாகன உரிமையாளர் அல்லது பெற்றோர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவர்களே பொறுப்பேற்று தண்டனையை அனுபவிக்க வேண்டும். காரணம் பெற்றோர்கள் அவர்களை கவனித்து அவர்களை இது போன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடாமல் எச்சரிக்க வேண்டும். சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். மேலும் குற்றத்தில் ஈடுபடும் சிறுவர்கள் மீது சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
பொதுமக்களாலும் இதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு ஒத்துழைப்பு புதுச்சேரி காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நலனையும் வாகன ஓட்டிகளின் நலனையும் கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு வாகனத்தை இயக்கத்தை அனுமதிக்க வேண்டாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.