2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விறுவிறுப்புடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் திரை பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும் இது மாலை 6 மணிக்கு முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. 5.67 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது தொடங்கியுள்ள வாக்குப்பதிவில் பல்வேறு தமிழ் திரை பிரபலங்களும் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தியுள்ளனர். அதில், முதல் ஆளாக நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் திருவான்மியூரில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். மேலும், நடிகரும், இயக்குநரும், அரசியல்வாதியுமான சுந்தர்.C மற்றும் அவரது மனைவியுமான குஷ்பூ மந்தைவெளியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் கௌதம் கார்த்திக் தனது வாக்கினை அளித்தார். ஆழ்வார்பேட்டையில் இசையமைப்பாளர் அனிருத், நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் ஜனநாயக கடமையை ஆற்றினார். புதுமுக இயக்குநர் கென் கருணாஸ் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். புதுத்தாமரைப்பட்டி மதுரை கிழக்கில் நடிகர் சசிகுமார், பிரபல மேடை பேச்சாளர் ரேவதி சங்கரன், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் போன்றோர் தங்களது வாக்கினை செலுத்தினர். விஜய்க்காக பரப்புரையில் ஈடுபட்ட ஜெய் சென்னையில் தனது வாக்கினை செலுத்தினார்.அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ், ஹரிஷ் கல்யாண், RJ பாலாஜி போன்றோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும், துருவ் விக்ரம், அவரது தந்தை விக்ரம், இயக்குநர் சுதா கொங்கரா போன்றோர் தனகது வாக்குகளை செலுத்தியுள்ளனர். நடிகை திரிஷா தனது தாயுடன் வந்து வாக்கினை செலுத்தினார். நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் தங்களது வாக்கினை செலுத்தினர். மேலும், நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நடிகர் பரத் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களான, எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார். மேலும், அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தில்லை நகர் பகுதியில் வாக்களித்தார். அரசியல் தொடங்கி முதல்முறை விஜய் தனது வாக்கினை நீலாங்கரையில் செலுத்தினர். மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் மயிலாப்பூரிலும், நீலாங்கரையில் நாதக தலைவர் சீமான், தவெக நிர்வாகி செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்திலும் வாக்கினை செலுத்தினர். ராயபுரம் பகுதியில் அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார், தூத்துக்குடியை சேர்ந்த கீதாஜீவன் குடுபத்துடனும் வந்து தங்களது வாக்கினை செலுத்தினர். திருச்சி திருவெறும்பூரில் வாக்களித்த அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் போன்றோர் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதியும் தனது குடும்பத்தினருடன் வாக்கினை செலுத்தினர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை செலுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்