phone addiction phone addiction
இந்தியா

மகளின் தொலைபேசி பயன்பாட்டை குறைக்க ரூ. 65,000 செலவு! பவுன்சர்களை நியமித்து கண்காணிக்கும் பெற்றோர்கள்

தங்கள் மகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நான்கு பவுன்சர்களைப் பணியமர்த்ய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Vinvizhi Leninton

குஜராத்தில் 16 வயது சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்த நான்கு பவுன்சர்களைப் பணியமர்த்திய சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த பவுன்சர்கள் இரண்டு ஷிஃப்டுகளில் பணிபுரிந்து, அந்த சிறுமி மொபைல் போன் பயன்படுத்துவதிலிருந்து 24 மணி நேரமும் அவரை பாதுக்கப்பதாக கூறப்படுகிறது. அவரது திரைப் பயன்பாட்டு அடிமைத்தனத்தைக் கட்டுப்படுத்த அந்தக் குடும்பம் கிட்டத்தட்ட 65,000 ரூபாய் செலவிடுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, அந்தச் சிறுமி தனது கைபேசி மற்றும் சமூக ஊடகங்களுக்குக் தீவிரமாக அடிமையாகி இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் அவரிடமிருந்து போனை பறிக்க முற்படும்போதெல்லாம் அச்சிறுமி அவர்களிடம் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஒரு புகைப்படப் பகிர்வுத் தளத்தில் படங்களைப் பகிர்வதிலும், அடிக்கடி படங்களைப் பதிவிட்டு முன்பின் தெரியாதவர்களுடன் உரையாடுவதிலும் அச்சிறுமி அதீத ஈடுபாடும் கொண்டிருந்துள்ளார்.

இந்த செயல்முறை அவரின் பெற்றோரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியது. இதனிடையில், சமூக வலைதளங்களில் மூலம் அறிமுகமாகி பழகிய நண்பர்களைச் சந்திக்க அச்சிறுமி யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவும் தொடங்கியுள்ளார். பெற்றோர் அவரிடமிருந்து கைபேசியைப் பறிக்க முயன்றபோது, ​​அவர் கடும் ஆக்ரோஷத்துடனும் கோபத்துடனும் எதிர்வினையாற்றி, வீட்டு உபகரணங்களைத் தூக்கி எறிந்து உடைத்துள்ளார். ஒரு அறிக்கையின்படி, ஒருமுறை அச்சிறுமி வன்முறையின் உச்சத்திற்கே சென்றுள்ளார். தன் வீட்டின் தொலைக்காட்சி பெட்டியை உடைத்து, அவர்களது உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து மைக்ரோவேவை தூக்கி எறிந்ததுடன், தன் தாயையும் தாக்கியுள்ளார்.

இதனால் அச்சிறுமியின் பெற்றோர் கிட்டத்தட்ட 65,000 ரூபாய் செலவு செய்து காப்பதாக கூறப்படுகிறது. தற்போது சில பெற்றோர்கள் தங்களின் பதின்வயது குழந்தைகளை கண்காணிக்க பாதுகாப்பு சேவைகளைப் பயன்படுத்துவதாக முகமைகள் தெரிவிக்கின்றன. முன்பு பெரும்பணக்காரர்கள், பிரபலமானவர்களை பாதுகாக்க இருந்த இந்த பனி தற்போது வீடுவரை உள்நுழைந்து குழந்தைகளை காக்க தொடங்கியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.