இந்தியா

"உயிர் முக்கியம் பிகிலு" - மனைவிக்கு அவரது கள்ளக்காதலனை திருமணம் செய்து வைத்த கணவர்… வன்முறையை தவிர்க்கவே இதை செய்ததாக பேட்டி!

பம்மிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

இக்காலகட்டத்தில் நாடு முழுவதும் திருமணத்திற்கு பிறகு கணவனோ மனைவியோ வேறு ஒருவருடன் தொடர்பு வைத்து கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் இருப்பது அதிகரித்து வருகிறது. இதில் சில உச்சக்கட்டமாக கள்ளத்தொடர்பு குறித்து அறிந்து கொள்ளவும் கணவனையோ அல்லது மனைவியை கொள்ளும் அளவிற்கும் துணித்து வருகின்றனர். மேலும் வெகு சிலர் கள்ள தொடர்பிற்கு தடையாக இருப்பதாக கூறி பெற்ற குழந்தையை கூட கொலை செய்ய அஞ்சுவதில்லை. இது போன்ற ஒரு நிலை தனக்கோ தனது குழந்தைக்கோ வந்து விடக்கூடாது என எண்ணி உத்திரப்பிரதேசத்தில் ஒருவர் செய்த செயல் மக்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம், மிர்சாப்பூரை சேர்ந்தவர் தஞ்சய். இவர் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் ஜலால்பூர் பகுதியை சேர்ந்த பம்மி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தஞ்சய்க்கு மும்பையில் வேலை கிடைத்துள்ளது. எனவே தஞ்சய் குடும்பத்துடன் மும்பைக்கு சென்று வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். அப்போது பம்மிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில திணைக்கு முன்பு தஞ்சய் அலுவலகத்திற்கு சென்ற நிலையில் ராஜுவுடன் சென்ற பம்மி தனக்கு தஞ்சய்யுடன் வாழ விருப்பமில்லை என தெரிவித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தஞ்சய் மனைவி பம்மியை சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்த நிலையில் தஞ்சய் அவரது மனைவி மற்றும் மனைவியின் காதலியை ஜான்பூர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று சட்டப்படியும் சடங்குகள் படியும் திருமணம் செய்து வைத்து ஆசிர்வாதம் செய்து வாய்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து பேசிய தஞ்சய் தேவையற்ற வன்முறையை தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் தனது மகனை தானே வளர்த்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.