பகல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பகல்காம் பகுதியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். நாட்டையே புரட்டி போட்ட இச்சம்பவத்தை தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம் ஆகியவை முறிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் உருவானது.
இந்நிலையில் பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்பை அழிக்கும் நோக்கோடு முப்படைகளும் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய குழுக்களின் முகாம்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட 9 பகுதிகளில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பகல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களின் குங்குமத்திற்கு பதில் சொல்லும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய ராணுவம் நடத்தியுள்ள எதிர் தாக்குதல் குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா விளக்கமளித்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்