இந்தியா

விளையாடி கொண்டிருந்த குழந்தைக்கு வினையான நாய்க்கடி.. போக்குவரத்து காவலரின் நடவடிக்கையால் உயிரிழந்த சிறுமி!

சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் அவ்வழியே சென்ற அசோக்கின் வாகனத்தை எதிர்பாராத நேரத்தில்

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் தாலுகாவின் கொரவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான அசோக் இவருக்கு. திருமணமாகி 27 வயதில் வாணி என்ற மனைவியும் மூன்றரை வயதில் ஹிருதீக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று மாலை குழந்தை ஹிருதீக்ஷா வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த ஒரு நாய் குழந்தையை கடித்திருக்கிறது.இதனால் குழந்தை ஹிருதீக்ஷா அலறி சத்தமிட்டதை கேட்ட வீட்டில் இருந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு இருசக்கரவாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் மாத்தூர் சாலையில் வழக்கம் போல் ஹெல்மண்ட் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர்கள் அவ்வழியே சென்ற அசோக்கின் வாகனத்தை எதிர்பாராத நேரத்தில் வழிமறித்துள்ளனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தில் இருந்து கணவன் மனைவி குழந்தை என மூவரும் சாலையில் தடுமாறி விழுந்துள்ளனர்.

இதில் மூன்றரை வயதான குழந்தை ஹிருதீக்ஷா தலையில் பலத்த காயமடைந்துள்ளார்.  பெற்றோர்களுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது தலையில் காயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்