இந்தியா

கும்பமேளா டு பாலிவுட்! மோனாலிசாவின் கண்ணீர் கதை...

நாங்கள் இருவரும் இந்து திருமண முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அவருக்கு என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை..

மாலை முரசு செய்தி குழு

கடந்த ஆண்டு கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த இவர் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இயக்குநர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்ததாகவும் பரபரப்பு குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த கும்பமேளாவில், தனது குடும்பத்துடன் பசிமணி விற்று வந்தவர்தான் மோனலிசா. மேலும் அந்த கும்பமேளாவிற்கு வந்திருந்த யூட்டியூபர் ஒருவர், பதிவிட்ட வீடியோவால் ஒரே இரவில் வைரல் ஆனவர்தான் மோனலிசா. தனது வசீகரமான கண்களாலும், இயல்பான பேச்சாலும் பிரபலமான மோனாலிசாவிற்கு சமீபத்தில் ஃபர்மான் கான் என்பவருடன் கேரளாவில் திருமணம் ஆனது.

திருமண நிகழ்வு :

கடந்த மார்ச்11 மோனலிசா ஃபர்மான் என்ற இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தனது குடும்பத்தினர் இந்த உறவை எதிர்ப்பதாகவும், தனது விருப்பத்திற்கு மாறாக தந்தை தன்னை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாகவும் கூறி, மோனலிசா தம்பானூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். பின்னர் இந்த ஜோடி, திருவனந்தபுரத்தில் உள்ள நைனார் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இந்த விழாவில் வி. சிவன்குட்டி, எம்.வி. கோவிந்தன் மற்றும் ஏ.ஏ. ரஹீம் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தங்கள் இங்கு பாதுகாப்பாக உணர்வதால் இங்கு திருமணம் செய்துகொண்டோம், என்றும், இந்த திருமணம் ‘லவ் ஜிகாத்’ என பலரும் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக மோனலிசா தனது கணவர் முகமது ஃபர்மான் உடன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் இருவரும் இந்து திருமண முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அவருக்கு என்னை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. நான் தான் அவரை கட்டாயப்படுத்தினேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு தற்போது மீண்டும் மோனலிசா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மோனாலிசாவும் அவரது கணவரும் கொச்சியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கணவருடன் வந்திருந்த மோனலிசா, அங்கு செய்தியாளர்களிடம், தனது சுவரொட்டிகள் எரிக்கப்படுவதாகவும், மக்களிடமிருந்து தங்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் வருவதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், சனோஜ் மிஸ்ரா என்ற இயக்குநர், தன்னைப்பற்றி அவதூறாகப் பேசுவதாகவும், தனது படங்களில் தன்னை நடிகையாக நடிக்க வைக்க மாட்டேன் என்று கூறுவதாகவும் மோனாலிசா பகிர்ந்துகொண்டார். மேலும் அவர், "அவருடைய படங்களில் யார் நடிக்க விரும்புவார்கள்? அவர் மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான நபர். அவர் படங்கள் என்ற பெயரில் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொள்கிறார்," என்றும் குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், படப்பிடிப்புத் தளத்தில் அவர் என்னிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டார். சனோஜ் மிஸ்ரா என்னைத் தவறாக தொட்டார் என்று நான் என் குடும்பத்தினரிடம் கூறினேன், அப்போது, தான் குரல் கொடுக்க முயன்றதாகவும், ஆனால் தனது குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். " என் குடும்பத்தினர் எனக்குத் துணையாக நிற்கத் தயாராக இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் இதைப் பற்றிச் சொன்னேன். யாரும் எனக்குத் துணையாக நிற்கவில்லை. 'இது உன்னுடைய முதல் படம், இல்லையா?' என்று கேட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பணம் மட்டுமே தேவைப்பட்டது" என்றும் மோனலிசா கூறினார்.

இதற்கு முன்பு, 28 வயதுப் பெண் ஒருவர், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் வசித்து வந்தபோது, ​​2020ம் ஆண்டில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் மூலம் மிஸ்ராவைச் சந்தித்ததாகக் கூறினார். அவருக்கு சினிமாவில் நடிக ஆசையிருந்தது. சமூகவலைத்தளத்தில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, சனோஜ் மிஸ்ரா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி, தன்னைச் சந்திக்க வருமாறு அவரைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஜூன் 18, 2021 அன்று, அவர் அப்பெண்ணை ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்று, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அவர் தனது தனது வாக்குமூலத்தில், மிஸ்ரா தனது அந்தரங்கப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துவைத்து மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மும்பையில் அவருடன் சேர்ந்து வாழ்ந்ததாகவும், அங்கு அவர் தன்னை மூன்று முறை கருக்கலைப்பு செய்யக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார். இதுமட்டுமின்றி, திருமணம் செய்துகொள்வதாகவும், திரைப்பட வாய்ப்புகள் வாங்கித்தருவதாகவும் கூறி ஏமாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் இது குறித்து சனோஜ் மிஸ்ரா, அப்பெண்ணை தான் ஒருபோதும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும், என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் கூறினார். அதன் பின்னர், இது "பாலியல் துன்புறுத்தல் தொடர்பான மற்றுமொரு பொய்ப் புகார் வழக்கு" என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியதை அடுத்து, ஜாமீன் பெற்றார் சனோஜ் மிஸ்ரா.

சனோஜ் மிஸ்ரா 2024-ல் வெளியான 'தி டைரி ஆஃப் பெங்கால்' திரைப்படத்தின் மூலம் அங்கீகாரம் பெற்றார். பின்னர், தனது வரவிருக்கும் திரைப்படமான 'தி டைரி ஆஃப் மணிப்பூர்'ல் மகா கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஒரு கதாபாத்திரம் வழங்கவுள்ளதாக கூறி செய்திகளில் இடம்பிடித்தார்.

தற்போது, மோனாலிசாவும் சனோஜ் மிஸ்ரா குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார்.மேலும், இந்த தம்பதியினர் தங்களுக்கு வந்த கொலை மிரட்டல்கள் மற்றும் சுவரொட்டிகள் எரிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, மோனாலிசாவும் ஃபர்மானும் மத்திய மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளுக்குப் பாதுகாப்பு கோரி அவசர வேண்டுகோள் விடுத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.