இந்தியா

“தொப்புள் கொடியுடன் கிடந்த 9 மாத சிசு” - வாக்குவாதத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்.. தண்டவாளத்தில் உடல் சிதறி பறிபோன மூன்று உயிர்கள்!

இதற்கு மறுப்பு தெரிவித்த நிதின் தனது வீட்டில் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவே நாம் பிரிந்து விடலாம்

Mahalakshmi Somasundaram

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நிதின் ராகுல்.  இவர் பெங்குளுரு பகுதியில் இருக்கும் வியாசா நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியைச்  சேர்ந்த தரணி என்ற பெண்ணுக்கும்  நிதினுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று நெருங்கி பழகிய நிலையில் தரணி கர்ப்பமடைந்துள்ளார். எனவே தனது காதலை குறித்து பெற்றோரிடம் தரணி தெரிவிக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர் என சொல்லப்படுகிறது. அதே போல் நிதின் வீட்டிலும் காதலுக்கு அனுமதி இல்லாத நிலையில் தரணி “நம்ம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்” என நிதினிடம் கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நிதின் தனது வீட்டில் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவே நாம் பிரிந்து விடலாம் என கூறியுள்ளார். இதனால் தரணிக்கும் நிதினுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த நிதின் நேற்று முன்தினம் இரவு, ஆம்பூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து  தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் நிதின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காதலன்  தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததை அறிந்த 9 மாத கர்ப்பிணியாக இருந்த தரணி. தாணும் வாணியம்பாடி பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று காலை நிதின் போலவே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதில் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை தொப்புள் கொடியுடன் வெளியில் சிதறிய நிலையில் தரணியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த திருப்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நர்சிங் கல்லூரி மாணவர்கள் காதல் விவகாரத்தில் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்