“எனக்கு கிடைக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது” வீட்டை பூட்டிக் கொண்டு இளைஞன் வெறிச்செயல்..ரத்த வெள்ளத்தில் 15 வயது சிறுமி!

இதனை கண்ட மர்ம நபர் வீட்டை உள்பக்கமாக பூட்டி ஜனனியை மீண்டும் கத்தியால் குத்தியுள்ளார்..
22 year boy stabed minor girl
22 year boy stabed minor girl
Published on
Updated on
2 min read

“சோளிங்கர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை - கொலையில் ஈடுபட்ட காதலனுக்கு பொதுமக்கள் தர்மடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைப்பு. 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத்குமார் இவர் கார்ப்பரேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பிரியா என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் . ஜகத்குமார் மற்றும் பிரியா தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரியா திருவள்ளூர் மாவட்டம் கேஜி கண்டிகை பகுதியில் உள்ள தன் தாய் தன் மகனோடும் புலிவலத்தில் ஜகத் தனது மகள் மற்றும் தாயோடு   வசித்து வருகிறார்.

இவர்களது  மகள் ஜனனி (15) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பதினோராம் வகுப்பில் சேர காத்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை ஜனனி, அவரின் அதை மகள் லக்ஷயா ஆகியோர் அவரது பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பாட்டி வீட்டின் மேலே காய்ந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். 

அந்த சமயத்தில் திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டினுள் புகுந்து ஜனனி மற்றும் லக்ஷயாவை  கத்தியால் பலமாக தாக்க தொடங்கியுள்ளார். இந்த தாக்குதலில் தப்பிய லக்ஷயா வெளியே வந்து கூச்சலிட அக்கம்பக்கத்தினர் அங்கு ஒன்று திரண்டனர், இதனை கண்ட மர்ம நபர் வீட்டை உள்பக்கமாக பூட்டி ஜனனியை மீண்டும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ஜனனி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் 

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த மர்ம நபரை தாக்கி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனிடையே உயிரிழந்த ஜனனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கத்திக்குத்தில் காயம் அடைந்த லக்ஷயா மற்றும் பிடிபட்ட கொலையாளி ஆகியோர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிறுமியை கொடூரமாக கொன்ற வாலிபர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர், இதில் பிடிபட்ட மர்ம நபர் திருவள்ளூர் மாவட்டம் கேஜி கண்டிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (22) என்பதும் இவர் ஆந்திரா நகரில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது

இந்நிலையில் ஜனனி கேஜி கண்டிகையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும்போது சுப்பிரமணியுடன் நட்பு ரீதியாக பழகி உள்ளார். ஆனால் சுப்பிரமணி ஜனனியை லவ் டார்ச்சர் செய்யவே சுப்பிரமணியிடமிருந்து விலக முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் விடாமல் தன்னை காதலிக்கும்படி ஜனனியை தொல்லை செய்ததாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி தனது இருசக்கர வாகனத்தில் புலிவலத்துக்கு  சென்றுதான் இத்தகு கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்.

காரணம் எதுவாக இருந்தாலும் பெண்கள் மீதான கொலைவெறி தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது  எனவும் சமுதாயத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது  ஏற்பட்டுள்ளதாக இது போன்ற செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவிக்கும் சமூக அலுவலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com