உலகில் எந்த பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்லவே முடியாது. இந்த தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம், வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். மேலும், சில நாடுகளில் பொதுவெளியில் பெண்கள் பலவிதமான பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகின்றனர். பேருந்து நிலையம், ஆட்டோ, ரயில் நிலையம் என பல இடங்களில் அவர்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் இலங்கையில் நடந்துள்ளது.
வெளிநாட்டு பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக, 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தைச்சேர்ந்த இளம் பெண் ஆட்டோவில் தனி நபராக, தற்போது இலங்கையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். நியூசிலாந்தைச் சேர்ந்த அந்த இளம் பெண் பயணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோதான் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இலங்கையில் அவரது 4-ஆம் நாள் பயணத்தை அதிகாலையில் மிகுந்த ஆனந்தத்துடன் துவங்கியுள்ளார். அப்போது அவர் சாலையில் தனிநபராக ஆட்டோ ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்த ஒரு இளைஞர் அந்த பெண்ணின் ஆட்டோவை பின்தொடர்ந்துள்ளார்.
வெளிநாட்டுக்காரர்களை எல்லா ஊரிலும் வித்தியசமாக பார்ப்பார்கள் பெரு நகரங்களில் அந்த பிரச்சனை இல்லை என்றாலும், சிற்றூர்களில் டவுன் மாதிரியான பகுதிகளில் இது போன்ற சிக்கல்கள் உள்ளன.
ஆனாலும், அந்த பெண் சிறிது நேரம் ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிய அந்த இளைஞர், சிறுது நேரத்திலே அந்த பெண்ணுக்கு சங்கடமான உணர்வை அளித்துள்ளார். அவரை நிராகரிக்கும் வகையில் தனது ஆட்டோவின் வேகத்தை கூட்டி அங்கிருந்து ஓட்டிச் சென்று விட்டார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் பயணி தன்னை ஆசுவாசம் செய்து கொள்ளலாம் எனக் கருதி ஒரு இடத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு தாகம் தண்ணீர் பருகி இருக்கிறார்.
ஆனால் ஸ்கூட்டரில் தொல்லை செய்த அந்த இளைஞர் மீண்டும் அங்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்திருக்கிறார். அந்த பெண் பயணியும் அவரிடம் சில வார்த்தைகள் பேசி இருக்கிறார். ஆனால் சிறுது நேரத்திற்கெல்லம் எங்குதங்கி இருக்கிறீர்கள்? நீங்கள் எங்கு செல்வீர்கள்? என தேவையில்லாத கெளவிகளை எழுப்பியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ‘என்னுடன் உடலுறவுக்கு வருகிறாயா?’ என அந்த நபர் அழைத்த உடனே, அந்த சாலையிலே அங்கேயே வைத்து சுய இன்பத்தில் ஈடுபட்டார்.
அவரின் சொல்ல அதிர்ந்த பெண், அங்கிருந்து வேகமாக ஆட்டோவை இயக்கி தப்பித்தோம் பிழைத்தோம் என சென்றுவிட்டார்.
பின்னார் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்த அப்பெண்,” என்னைப்பார்த்து அந்த நபர் இது போன்ற ஒரு கேள்வி கேட்டதும், அது போன்ற ஒரு அநாகரீக செயலில் ஈடுபட்டதும் என்னை நிலைகுலையச் செய்தது. தனியாக வலம் வரும் ஒரு பெண் பயணிக்கு இதுபோல் பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்த்தவே இந்த வீடியோவை ஒரு விழிப்புணர்வுக்காக பகிர்கிறேன். நான் மனம் தளரவில்லை. ஆனால் என்னுடைய மன தைரியத்தில் ஒரு சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.”
அந்த ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் அந்த நபரின் செயல் அனைத்தும் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ மூலமாகவே அந்தப் பெண் இந்த விழிப்புணர்வை செய்திருக்கிறார். இதனிடையே இந்த வீடியோ விரைவாகவே வைரலான நிலையில் , நியூசிலாந்து நாட்டு பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இலங்கையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.