பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெறவுள்ள, 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். டெல்லி சென்று சிறிது நேர ஓய்வுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்றுநடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தினை மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டத்தை சில மாநிலங்கள் புறக்கணித்து உள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணியிலான ஆட்சி, அமைத்துள்ளது. ஆனாலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார். இதனால் பாஜக கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கர்நாடக முதலவர் சித்தராமையாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வந்த நிலையில் இந்த ஆண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்.
காலை 11 மணியளவில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
மத்திய வரியில் மாநிலங்களுக்கு 50% வரும் பங்கை தரவேண்டும், உறுதியளிக்கப்பட்ட 41% பதிலாக நாம் இப்போதும் 33.16% மட்டுமே பெறுகிறோம்.
அம்ருத் 2.0 ஐப் போலவே, தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருப்பதால், அர்ப்பணிப்புள்ள நகர்ப்புற மாற்றப் பணியின் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.
தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய பெருமைக்காக ஆங்கிலத்தில் பெயர்களுடன் காவிரி, வைகை மற்றும் தாமிரபரணிக்கு #CleanGanga பாணி திட்டத்தையும் நான் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், பிரதமர் மோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசுவார் என தகவல்வெளியாகின்றன. இதில், பள்ளி கல்வி துறை, மெட்ரோ ரெயில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
முதல்வர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் அரசியல் இருப்பதாக அதிமுக, பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். திமுகவுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதால், முதல்வர் பிரதமர் மோடியை சந்திக்க விரும்புவதாக அதிமுக தலைவர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
குறிப்பாக 3 ஆண்டுகளாக கூட்டத்தை புறக்கணித்து வரும் முதல்வர், தற்போது எந்த காரணத்துக்காக டெல்லி செல்கிறார்? மத்திய அரசின் மீது திடீர் நம்பிக்கை வந்தது ஏன்? என்றும் பாஜகவை சேர்ந்த தமிழிசை நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். இத்தகைய அரசியல் சூழ்நிலையில், பிரதமர் மோடி- முதல்வர் ஸ்டாலினின் இன்றைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்