இன்றைய சூழலில் , திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அதிசயமாக ,உள்ள நிலையில் தெலுங்கானாவில், ஒருவர் ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தெலுங்கானா ,கோமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டம் லிங்கபூர் மண்டலத்தில் உள்ள, கும்னூர் கிராமத்தில் வசிக்கும் சூர்யதேவ், தனது கிராமத்திற்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த , லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி , ஆகிய இரண்டு பெண்களையும் கடந்த ஒன்றரை ஆண்டாக காதலித்து வந்துள்ளார் .
இதனை அறிந்த அந்த பழங்குடியின மக்களின் ஊர், பெரியவர்கள் இரண்டு பெண்களையும் அவர்களின், குடும்பத்தினரையும் அழைத்து பேசியுள்ளனர் . அப்போது இரண்டு பெண்களுமே நாங்கள் சூர்ய தேவுடன் வாழ்வோம் என்று, கூறிய நிலையில், அந்த இரண்டு பெண்களின் குடும்பத்துடனும் பேசியுள்ளனர்.
இரண்டு குடும்பங்களும், இதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் இரண்டு பெண்களிடமும், அனைவர் முன்னிலையிலும் வைத்து மூவரும் ஒரே குடும்பமாக சண்டை சர்ச்சரவு இல்லாமல் வாழ்வீர்களா என கேட்டு ஒப்புதல் வாங்கிக்கொண்டு திருமணத்திற்கு தயார் செய்துள்ளனர் .
இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை [20.3.2025] ஊர் முன்னிலையில் பெரியோர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆசியுடன், சூர்யா தேவ் ஒரே மேடையில் இருவரையும், திருமணம் செய்துகொண்டார் .
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்